இன்று கேரளா புறப்படுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்! பினராயி விஜயனுடன் சந்திப்பு!

0
173

தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, உள்ளிட்ட மாநிலங்களையும், புதுச்சேரி, லட்சத்தீவுகள், அந்தமான் நிக்கோபார் தீவுகள் உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களையும் ,உள்ளடக்கியது தென்மண்டல குழுவாகும்.

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித்ஷா தலைமையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறும் தென்னிந்திய முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்றுக் கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை கேரளாவிற்கு புறப்பட்டு செல்கிறார்.

இந்திய மாநில மறுசீரமைப்புச் சட்டம் 1956 அடிப்படையில் இந்திய மாநிலங்களை 6 மண்டல குழுவாக பிரித்திருக்கிறார்கள். தென்பண்டல குழுவில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா, உள்ளிட்ட மாநிலங்களும், புதுவை, லட்சதீவுகள், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், உள்ளிட்ட யூனியன் பிரதேசங்கள் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கின்றன.

மண்டலத்தில் உள்ள மாநிலங்களிடையே இருக்கின்ற மன வருத்தங்கள், பிணக்குகள், உள்ளிட்டவற்றை தீர்த்து வைப்பதற்கும், நல்லிணக்கம், ஏற்படுத்துவதற்கும், மாநிலங்களுக்கு தேவைப்படும் ஆலோசனைகள் வழங்குவதற்காகவும், அவ்வப்போது கூட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் தற்போது வரையில் 29 தென் மண்டல கூட்டங்கள் நடைபெற்று இருக்கிறது அந்த வகையில் நாளைய தினம் 30-வது தென் மண்டல கூட்டம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது.

இதில் பங்கேற்றுக் கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை 11.40 மணியளவில் indigo விமான மூலமாக கேரளா புறப்படுகிறார். அதன்பிறகு கேரள முதலமைச்சர் பினராய் விஜயனை அவர் நேரில் சந்தித்து முல்லைப் பெரியாறு, சிறுவாணி, நெய்யாறு, உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பாக விவாதிக்க உள்ளதாக தெரிகிறது.

அதோடு நாளைய தினம் நடைபெறவிருக்கும் தென்மண்டல குழு கூட்டத்தில் பங்கேற்று கொண்டு அவர் உரையாற்றுகிறார் எனவும், சொல்லப்படுகிறது.

Previous articleமின்கட்டணம் உயர்வு கட்டாயம்?உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
Next article பயணிகளின் கவனத்திற்கு!  இன்று 800 விமாங்கள் இயங்காது!