ராகுலுக்கு தண்டனை விதித்த நீதிபதிக்கு எச்சரிக்கை விடுத்த தமிழக காங்கிரஸ் நிர்வாகி!
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய குற்றத்திற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் வயநாடு பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்திக்கு இரண்டாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது தொடர்ந்து அவரது எம்பி பதவி பறிக்கப்படுவதாக நாடாளுமன்ற செயலாளர் தெரிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கட்ட போராட்டங்களை அறிவித்து நடத்திவந்தனர். மேலும் காங்கிரஸ் தலைவர் மலிகார்ஜுனகர்கே தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டமும் நடைபெற்றது, தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது பங்கிற்கு கண்டனங்களை தெரிவித்தார். இதனிடையே தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் எஸ்டி எஸ்சி பிரிவினர் நேற்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய எஸ்டி எஸ்சி பிரிவு தலைவர் துரை மணிகண்டன் பேசிய போது ராகுல் காந்தி கைதுக்கு மக்கள் அமைதியாக இருப்பார்கள் என்று பாஜக நினைக்க வேண்டாம், அவரை சிறைக்கு அனுப்ப வேண்டும் என்ற பாஜகவை இந்த நாட்டைவிட்டே அனுப்பும் காலம் வரும், ராகுல்காந்திக்கு சிறை தண்டனை விதித்த நீதிபதியின் நாக்கை அறுப்போம் என்று துரை மணிகண்டன் கூறியது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல் காந்தி தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சூரத் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ள நிலையில் தமிழக காங்கிரஸ் நிர்வாகியின் இந்த பேச்சு மக்கள் மத்தியில் மட்டுமல்ல அவர்கள் கட்சியில் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கி உள்ளது.