முடிவுக்கு வருகிறதா மூன்றாம் அலை! தமிழகத்திற்கு இன்ப அதிர்ச்சி……

0
234
Representative image

தமிழ்நாட்டில் சில தினங்களாக அதிகரித்து கொண்டே வந்த கொரோனா வைரஸ் பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது. சுகாதாரத்துறை வெளியிட்ட இன்றைய அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

இன்று தமிழகத்தில் 1 லட்சத்து 50 ஆயிரத்து 931 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் 29 ஆயிரத்து 976 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை 32 லட்சத்து 24 ஆயிரத்து 236 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றின் காரணமாக சிகிச்சை பலனின்றி தமிழகத்தில் இன்று மட்டும் 47 பேர் சிகிச்சை உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரை மொத்தம் 37 ஆயிரத்து 359 பேர் கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர்.

இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் 2 லட்சத்து 13 ஆயிரத்து 692 பேர் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்றிலிருந்து இன்று 27 ஆயிரத்து 507 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 29 லட்சத்து 73ஆயிரத்து 185 பேர் குணம் அடைந்து உள்ளனர்.

Previous articleவகுப்பறையில் மாணவியிடம் தலைமை ஆசிரியர் பாலியல் அத்துமீறல் , சிக்கியது எப்படி?
Next article3 மில்லியன் லைக்குகளை தெறிக்கவிட்ட ‘வாத்தி கம்மிங்’