தமிழக தொழில் நுட்ப கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு! தட்டச்சு தேர்விற்கு விண்ணபிக்க கூடுதல் காலாவகாசம்!

Photo of author

By Parthipan K

தமிழக தொழில் நுட்ப கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு! தட்டச்சு தேர்விற்கு விண்ணபிக்க கூடுதல் காலாவகாசம்!

திருச்சியை சேர்ந்த பிரவீன்குமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில் ஆண்டுக்கு ஒரு முறை தட்டச்சு தேர்வு நடத்தப்படும்.இந்நிலையில் மற்றும் முதுநிலை தட்டச்சு தேர்வுகள் தாள் 1,தாள் 2 என்ற இரண்டு நிலைகளாக நடத்தப்படும்.கடந்த 75 ஆண்டுகளாக தட்டச்சு தேர்வில் தாள் 1 ஸ்பீடு தேர்வும்,தாள் 2 ஸ்டேட்மெண்ட் மற்றும் லெட்டர் தேர்வும் நடைபெற்று வருகின்றது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தேர்வு பற்றி வெளியான அறிவிப்பில் இளநிலை மற்றும் முதுநிலை தேர்வில் தாள்1 ல் லெட்டர் மற்றும் ஸ்டேட்மெண்ட் தாள் 2 ல் ஸ்பீடும் இருக்கும் என அறிவிக்கப்பட்டது.மேலும் இந்த வழக்கில் உத்தரவு வரும் வரை தமிழகத்தில் தட்டச்சு தேர்வு நடத்த கூடாது என அந்த வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் அடுத்த மாதம் நடக்க இருக்கும் வணிகவியல் தட்டச்சு தேர்வுக்கு விண்ணபிக்க இம்மாதம் 20 ஆம் தேதி தான் கடைசி தேதி என அறிவிக்கபட்டிருந்தது.இந்நிலையில் தனித் தேர்வர்களின் எண்ணிக்கை கூடுதலாக இருபதினால் அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வந்தது.

அந்தவகையில் இணையத்தில் பதிவு செய்த தனித் தேர்வர்கள் வரும் ஜனவரி 23 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தங்கள் சரிபார்க்கலாம் மற்றும் தங்களுக்கான தேர்வு அணிகளை தேர்வு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விவரங்கள் பெற https://dte.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று தெரிந்துக்கொள்ளலாம் என தமிழக தொழில் நுட்ப கல்வித்துறை அறிவித்துள்ளது.