தமிழகத்தில் அனல் பறக்கும் கூட்டணி பேரங்கள்! உடையும் முக்கிய கட்சிகளின் கூட்டணி!

Photo of author

By Sakthi

தமிழ்நாட்டில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று நேற்றைய தினம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் நடப்பு சட்டசபை பதவிக்காலம் இந்த வருடம் மே மாதம் 23ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.ஆகவே 2021 மே மாதம் 24ம் தேதிக்குள் அடுத்த சட்டசபையை தேர்வு செய்வதற்கான தமிழக சட்டசபைத் தேர்தல் இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தி முடிக்கப்பட்டு அதற்குள் புதிய சட்டசபை பதவி ஏற்க வேண்டும் என்பது விதி.

ஆகவே தமிழகத்துடன் கேரளா, அசாம், புதுச்சேரி, மேற்கு வங்காளம், போன்ற மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. சட்டசபை தேர்தல் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக அண்மையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தமிழகம் வந்து சேர்ந்தார். அதற்கு முன்னதாக அவர் அசாம், மேற்கு வங்காளம், போன்ற மாநிலங்களுக்கு சென்று அங்கே இருக்கக்கூடிய அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த நிலையில், தமிழகம் வந்த சுனில் அரோரா புதுச்சேரி, கேரளா, போன்ற மாநிலங்களுக்கு சென்று அங்கே ஆய்வுகளை மேற்கொண்டார்.

அதோடு அங்கே இருக்கக்கூடிய முக்கிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து விட்டு நேற்றைய தினம் பத்திரிக்கையாளர்களை சந்தித்து உரையாற்றிய சுனில் ஆரோரா வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தமிழகத்திற்கான சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்.

அதேபோல வாக்குச்சாவடி ஒன்றிற்கு ஆயிரம் நபர்கள் மட்டுமே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சென்ற தேர்தலை ஒப்பிட்டு பார்த்தோமானால் 34 மணி 73% அதிகமாக வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல கேரளாவில் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி அசாம் மாநிலம், மார்ச் மாதம் 27 ஆம் தேதியில் தேர்தல் நடத்த திட்டமிட்டு இருக்கிறது. புதுச்சேரியில் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல மே மாதம் இரண்டாம் தேதி இந்த ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தநிலையில், தேர்தல் தொடர்பான கூட்டணி பேச்சுவார்த்தைகள் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது.அரசியலில் நிரந்தர நண்பர்களும் கிடையாது, நிரந்தர எதிரியும் கிடையாது என்பதே தாரக மந்திரமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், எல்லா கட்சிகளுமே தங்களுடைய வெற்றிக்கு ஏற்றவாறு யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்று ஆலோசித்து வருகிறார்கள். அதோடு கொள்கைகளை மறந்து யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி அமைக்கலாம் என்ற நிலையில் இருந்து வருகிறார்கள். இந்த தேர்தலில் சசிகலாவின் பங்கு நிச்சயமாக மிகப் பெரியதாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதேபோல தேர்தல் தேதி அறிவித்த பின்னர் திமுக கூட்டணியில் இருந்து ரவி பச்சமுத்து வெளியேறி இருக்கிறார்.

தமிழ்நாட்டின் மூன்றாவது அணி அமைவதற்கான வாய்ப்புகள் தற்போது எழுந்து இருப்பதாகவே தெரிய வருகிறது. திடீர் திருப்பமாக இந்திய ஜனநாயக கட்சியும் நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியின் கூட்டணி அமைத்து இருக்கிறார்கள். அதிமுகவிலிருந்து சரத்குமாரும், திமுக கூட்டணியிலிருந்து ரவி பச்சமுத்தும் விலகி இருக்கிறார்கள். அதேபோல நடிகர் கமல்ஹாசனும் தங்களுடைய கூட்டணியில் ஒன்றிணைவார் என்று நடிகர் சரத்குமார் தெரிவித்திருக்கிறார். இவர்களுடன் சீமானும் ஒன்றிணைந்தால் இந்த கூட்டணி தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னரே சரத்குமாரும், சீமானும், சசிகலாவை சந்தித்து இருக்கிறார்கள்