அப்படிப்போடு.. தமிழக மின்சார வாரியத்தின் அசத்தல் அறிவிப்பு!! புது மின் இணைப்பு பெற இதெல்லாம் தேவையில்லை!!

Photo of author

By Vijay

 

அப்படிப்போடு.. தமிழக மின்சார வாரியத்தின் அசத்தல் அறிவிப்பு!! புது மின் இணைப்பு பெற இதெல்லாம் தேவையில்லை!!

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் பதவியேற்றதிலிருந்து பல அதிரடி அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். இந்நிலையில் தமிழக முதல்வர் திரு ஸ்டாலின் அவர்கள் முக்கிய திட்டம் ஒன்றை வகுத்து வருகிறார். அது என்னவென்றால் இங்கிலாந்தின் புகழ் பெற்ற நிறுவனமான ERNST & YOUNG நிருவனுத்துடன் இணைந்து ஒரு ஒப்பந்தம் செய்துள்ளார்.

E&Y நிறுவனத்தின் செயல் என்னவென்றால் முதன்மையாக உத்தரவாதம், வரி, தகவல் தொழில்நுட்ப சேவைகள் (சைபர் செக்யூரிட்டி, கிளவுட், டிஜிட்டல் டிரான்ஸ்ஃபர்மேஷன் மற்றும் AI போன்ற பகுதிகளில் நிர்வகிக்கப்படும் சேவைகள் உட்பட), ஆலோசனை மற்றும் அதன் வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனை சேவைகளை வழங்குகிறது.

இதன்மூலம் மொபைல் செயலியை உருவாக்கி மின்சார பணியாளர்களுக்கு பயன்படும் வகையில் அமையும். இதன் மூலம் மின்கட்டணம் செலுத்தாத இணைப்புகளை அறிய முடியும். மின்பளு குறைவு மற்றும் கோளாறுகளை அறிய முடியும். மேலும் மின்சார நுகர்வோர் அளிக்கும் புகார்கள் மற்றும் அதன் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை அறிய முடியும்.

அது மட்டுமில்லாமல் மேலும் ஒரு அறிவிப்பை தமிழ்நாடு மின்சார வாரியம் (tangedco) வெளியிட்டுள்ளது. வணிகவளாக கட்டிடங்கள் மற்றும் தொழிற்ச்சாலை கட்டிடங்கள் கட்டுவதற்கு புதிய மின் இணைப்பு பெற வேண்டுமென்றால் கட்டிட வேலை நிறைவு பெற்ற சான்றிதல் வேண்டும். ஆனால் இப்போது வெளியிட்ட அறிக்கையில் 14 மீட்டர் உயரம் கொண்டு கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிகவளாக கட்டிடங்களுக்கு கட்டிட வேலை நிறைவு சான்று தேவையில்லை. மற்றும் 700 மீட்டர் சதுர பரப்பு கொண்ட குடியிருப்புகளுக்கும் நிறைவு சான்று தேவையில்லை. இது புது மின் இணைப்பு பெறுவோருக்கு நற்ச்செய்தியாக அமையும்.