தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு! இவர்கள் அனைவரும் மின் இணைப்புடன் இதனை பொருத்த வேண்டும்!

Photo of author

By Parthipan K

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு! இவர்கள் அனைவரும் மின் இணைப்புடன் இதனை பொருத்த வேண்டும்!

Parthipan K

Tamil Nadu Electricity Regulatory Authority announced! All of them have to fit it with electrical connection!

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு! இவர்கள் அனைவரும் மின் இணைப்புடன் இதனை பொருத்த வேண்டும்!

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய செயலர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அந்த அறிவிப்பில்.பொதுவாக தமிழகத்தில் மின் பழுது மற்றும் மின்கசிவால் விபத்துக்கள் ஏற்படுவதால் உயிரி சேதம் அதிகமாகின்றது.அதனை தடுக்கும் விதமாக தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் மின்சாரப் பகிர்மான விதிப்படி புதிய மின் இணைப்பை பெறுபவர்கள் ஆர்சிடி எனப்படும் ரெசிடுயல் கரன்ட் டிவைஸ் என்ற சாதனத்தை மின் இணைப்புடன் பொருத்த வேண்டும்.

மேலும் மழைக் காலங்களில் அதிகரித்து வரும் மின் விபத்துகள் மற்றும் மனித உயிரிழப்புகளை தடுப்பதற்காக புதிய மின்  நுகர்வோர் மட்டுமின்றி தற்போது மின் இணைப்பு வைத்துள்ள அனைத்து மின் நுகர்வோரும் ஆர்சிடி சாதனத்தை அவரவர் மின் இணைப்பில் தவறாமல்  கண்டிப்பாக பொறுத்த வேண்டும்.

இந்த ஆர்சிடி உயிர்காக்கும் சாதனத்தை மின் இணைப்புடன் பொருத்துவதன் மூலம் விபத்துக்கள் ஏற்படாமல் பாதுகாக்கப்படும்.அதனால் வீடு ,கடை ,தொழில் ,கல்வி நிறுவனங்கள் ,பொது இடங்கள் போன்றவைகளுக்கு பயன்படுத்தும் மின் இணைப்புடன் ஆர்சிடி சாதனத்தை பொருத்துவது கட்டாயம் என தெரிவித்துள்ளனர்.