தமிழக மீனவர்கள் 15 விடுவிக்க!!  மீண்டும் முதல்வர் மத்திய அரசிடம் வலியுறுத்தல்!! !!

0
121
Tamil Nadu fishermen to release 15!! Again the Chief Minister urges the central government!! !!
Tamil Nadu fishermen to release 15!! Again the Chief Minister urges the central government!! !!

தமிழக மீனவர்கள் 15 விடுவிக்க!!  மீண்டும் முதல்வர் மத்திய அரசிடம் வலியுறுத்தல்!! !!

தமிழக மீனவர்கள் அடிக்கடி சந்திக்கும் ஒரு மிக பெரிய பிரச்சனையாக இலங்கை கடற்படையினர். இவர்கள் அடிக்கடி தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்தாக சொல்லி கைது செய்கிறார்கள். இந்த பிரச்சனை ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க   தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு நேற்று கடிதம் அனுப்பிருந்தார்.

ஏற்கனவே கடந்த மாதம் 22 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் இருந்து விசைப்படகின் மூலம்  மீன்பிடிக்க சென்ற மீனவர்களை  இலங்கை கடற்படையினர்  சிறைபிடித்தனர்.

மேலும் அவர்களை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்தாக கைது செய்யப்பட்டார்கள். மேலும் இலங்கை நீதிமன்றம் வழக்கை விசாரித்து  மொத்தம் 22 மீனர்வர்களை விடுதலை செய்தனர். ஆனால் அவர்களின் 4 படகுகளை விடுவிக்க மறுத்துவிட்டனர்.

அதனையடுத்து ஜூலை மாதம் 9 ஆம் தேதி  மீன்பிடிக்க சென்ற 15 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர்  சிறைபிடித்துள்ளர்கள். இந்த நிலையில் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 15 தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகுஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டக்டார் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்குக் நேற்று கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.

மேலும் இலங்கை  அகாரிகளுடன் தூதரக அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். மேலும் மீனவர்களின் உரிமைகள், வழ்வாதாரங்களை  பாதுகாக்க வேண்டும் என்றும் குறிபிட்டுள்ளார்.

இந்த நிலையில் இலங்கை இடையே சுமுகமாக பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று மத்திய அரசை முதல்வர் மீண்டும்  வலியுறுத்தி உள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து கட்சி தலைவர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Previous articleதொடங்கிய 5 நாட்களில் புதிய சாதனை படைத்த செயலி!!  மகிழ்ச்சியில் மெட்டா நிறுவனம்!!
Next articleவீட்டில் பச்சை கிளி வளர்ப்பவர்களுக்கு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட வனத்துறை!!