தமிழகத்தில் முழு ஊரடங்கு மாநில அரசின் அதிரடி உத்தரவு!! டாஸ்மாக்குகளை முடக்கிய ஸ்டாலின்!!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2 ஆம் அலை அதிதீவிரமாக பரவி வந்த நிலையில் மத்திய அரசு பல கடுமையான கட்டுப்படுகளை பிறப்பிக்கப்பட்டது மேலும் இதானால் கடந்த மாதம் முதல் இரவு ஊரடங்கு மற்றும் ஞயிற்றுக் கிழமைகளில் ஊரடங்கு பிறப்பிக்கபட்டது. இதைத் தொடர்ந்து இரவு நேரங்களில் போக்குவரத்துகள் பதிக்கப்பட்டது. மேலும் கொரோனா வைரஸ் பதிப்பு அதிகமா பரவத் தொடங்கியத்தன் காரணமாக கடந்த வாரம் முதல் அனைத்து கடைகள் மட்டும் போக்குவரத்துகளுக்கு மதியம் 12 மணி வரை மட்டுமே இயக்கம் உத்திரவு பிறப்பிக்கப்பட்டு வந்த்து.
மேலும் கொரோனா வைரஸ் கோரதாண்டவம் தலைவிரித்தாடும் நிலையில் வரும் 10 ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் 24 ஆம் தேதி அதிகாலை 4 மணி வரை 15 நாட்கள் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. மேலும் இன்றும் நாளையும் அனைத்து கடைகளும் கலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கும் என கூறப்படுகின்றது.
மேலும் இந்த ஊரடங்கு காலகட்டத்தில் மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். நியாய விலைக்கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரி மட்டுமே செயல்படும். காய்கறி மட்டும் பூ விற்பனை செய்யும் நடைப்பாதை கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும் இயங்கும். நடைபெற்று வரும் கட்டிடப் பணிகளுக்கு அனுமதி. அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழில்சாலைகள் செயல்படும். அத்தியாவசிய துறைகளைத் தவிர்த்து மற்ற மாநில அரசு அலுவலகங்கள் இயங்காது. மத்திய அரசு அலுவலகங்களுக்கும் கட்டுபாடுகள் பொருந்தும் எனவும் கூறப்படுகிறது. அத்தியாவசிய பணிகளுக்கு செல்வோர் உரிய ஆவணங்களுடன் பணிக்கு செல்ல அனுமதி. மேலும் முக்கியமாக இந்த 15 நாள் ஊரடங்கு நாட்களில் டாஸ்மாக்குகள் முழுமையாக மூடப்படும் எனவும் மத்திய அரசு கூறி உள்ளது.