நியாயவிலை கடைகளில் பொருட்களை வாங்க செப்டம்பர் 30-ஆம் தேதிக்கு மேல் புதிய நடைமுறை!! தமிழக அரசு!

0
176

நியாயவிலை கடைகளில் பொருட்களை வாங்க விரல் ரேகை பதிவு அவசியம் என குடிமைப்பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள், பயோ மெட்ரிக் சிஸ்டம் மூலம் நியாயவிலை கடைகளில் பொருட்கள் வாங்கும் நடைமுறையை, பரீட்சார்த்த முறையில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், நாகை மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், அடுத்த மாதம் 30-ஆம் தேதிக்குள் அனைத்து மாவட்டங்களிலும் நியாயவிலை கடைகளில் பயயோமெட்ரிக் சிஸ்டம் இணைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். பயோமெட்ரிக் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, குடும்ப அட்டையில் பெயர் உள்ள நபர்களை, தவிர மற்ற நபர்கள் யாரும் நியாயவிலை கடைகளில் பொருட்களை வாங்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நியாயவிலை கடைகளில், குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேகை பதிவு சரிபார்க்கப்பட்ட பின்னரே, அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் என்றும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஎழாவது இடத்தில் உள்ள மெக்ஸிகோ?
Next articleதமிழகம் முழுவதும் தங்கள் வீட்டு வாசலிலேயே மெழுகுவர்த்தி ஏந்தி கூட்டுப் பிரார்த்தனை!! எதற்கு தெரியுமா??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here