தமிழக அரசு வேலைவாய்ப்பு; டிகிரி முடித்தவர்கள் ஜூன் 21க்குள் விண்ணப்பம் செய்யுங்கள்!!

0
317
Tamil Nadu Government Employment; Degree Completers Apply by 21st June!!
Tamil Nadu Government Employment; Degree Completers Apply by 21st June!!

தமிழக அரசு வேலைவாய்ப்பு; டிகிரி முடித்தவர்கள் ஜூன் 21க்குள் விண்ணப்பம் செய்யுங்கள்!!

தமிழ்நாடு அரசுக்கு கீழ் இயங்கி வரும் மீன்வளத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.அதன்படி காலியாக உள்ள 24 சாகர் மித்ரா பணியிடங்களுக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் 21.06.2024க்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

வேலை வகை: தமிழக அரசு வேலை

நிறுவனம்: தமிழ்நாடு மீன்வளத்துறை

பதவி பெயர்:

*சாகர் மித்ரா

காலியிடங்கள்: சாகர் மித்ரா பணிக்கு மொத்தம் 24 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்ட்ட கல்லூரியில் Bachelor degree in Fisheries Science/ Marine Biology/ Zoology/ Chemistry/ Botany/ Biochemistry/ Microbiology/ Physics/ Information Technology (IT) உள்ளிட்ட படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய உள்ள நபர்கள் 35 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

சம்பளம்: சாகர் மித்ரா பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.15,000 ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: இப்பணிக்கு நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி

சாகர் மித்ரா பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு முறையான ஆவணங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி: Office of the Assistant Director of Fisheries and Fishermen Welfare,No.77,S.N.Chetty Street, Royapuram,Chennai-13

விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.06.2024

மேலும் விவரங்களுக்கு: https://chennai.nic.in/