பேராசிரியர்கள் பணியிட மாறுதல்!! கலந்தாய்வுக்கான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!!

Photo of author

By Sakthi

Department of Education:தமிழக அரசு கல்லூரி ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு தேதியை அறிவித்துள்ளது தமிழக அரசு.

அரசு அதிகாரிகள் என்றால் தங்கள் சொந்த ஊரில் இருந்து வெகு தொலைவில் அல்லது வெளியூரில் பணி அமர்த்தப்படுவார்கள். அதிகாரிகள் குறிப்பிட்ட ஆண்டுகள் அப்பகுதியில் பணியில் ஈடுபடுவார்கள். பிறகு அரசு நடத்தும் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு தேர்வு செய்யப்பட்ட  ஆசிரியர்கள்  விரும்பிய  ஊரில் பணியமர்த்தப்படுவார்கள்.

அந்த வகையில்  தமிழக அரசு கல்லூரி  பேராசிரியர்கள் பணியிட மாறுதலுக்கான  கலந்தாய்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி .செழியன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி தற்போது அறிவித்து இருக்கிறார். இதன் மூலம் தமிழ்நாடு அரசு கல்வி துரையின் கீழ் இயங்கும் அரசு கலை கல்லூரி மற்றும் கலவியல் கல்லூரி ,தொழில்நுட்ப கல்லூரி ,அரசு பொறியியல் கல்லூரி ,அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி முதலியவற்றில் பணிபுரியும் ஆசிரியர்கள்   பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வு நடத்த நீண்ட நாட்கள் கோரிக்கை ஆசிரியர்கள் சார்பாக  வைக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு இணையம் வழியாக நடத்த முடிவு செய்து உள்ளது.
அந்த வகையில் 2024-25-ஆம் கல்வி ஆண்டிற்கான பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வு (counseling) உரிய நெறிமுறைகளை கையாண்டு 25.11.2024-க்குள்ளாக வெளிப்படைத் தன்மையுடன் இணையவழியின் வாயிலாக மேற்கொள்ள  உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.