ஒரே குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மாதம் ரூ.3000 வரை உரிமை தொகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது!!

0
328
tamil-nadu-government-has-ordered-to-give-entitlement-amount-up-to-rs-3000-per-month-to-people-in-the-same-family
tamil-nadu-government-has-ordered-to-give-entitlement-amount-up-to-rs-3000-per-month-to-people-in-the-same-family

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் பெண்களுக்கென பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மேலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு மகளிர் உரிமை தொகையாக மாதா மாதம் ரூ.1000 அவர்களது வங்கி கணக்கில் போடப்பட்டிருக்கிறது. மகளிர் உரிமை தொகை கிடைக்காதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்றும் தற்பொழுது கூறப்பட்டுள்ளது.

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டம் :-

2022 – 2023 ஆம் ஆண்டு முதல், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில், உயர் கல்வியில் சேர்ந்துள்ள அனைத்து பெண் குழந்தைகளுக்கும் ரூ.1000/- மாதந்தோறும் அவர்கள் பட்டப்படிப்பு முடியும் வரை வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், இந்த திட்டத்தினை விரிவுபடுத்தும் வண்ணம் 6 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் உயர்கல்வி சேர்ந்துள்ள ஆண் குழந்தைகளுக்கும் மாதம் தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு விடுத்தது.

கைம்பெண்கள், கைவிடப்பட்ட பெண்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள் மற்றும் குழந்தை திருமணத்திலிருந்து மீட்கப்பட்ட சிறுமிகள், குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்ட பெண்கள் சேவை இல்லங்களில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மகளிர் உரிமை தொகை, கல்வி பயிலும் குழந்தைகளுக்கான உதவித்தொகை என ஒரே குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மாதாமாதம் ரூபாய் மூன்றாயிரம் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

Previous articleஅசத்தலான சமையல் டிப்ஸ்! பெண்களே உங்களுக்கான 15 சமையல் டிப்ஸ்
Next articleஅனுபவ உண்மை நிச்சயமாக இதை பயன்படுத்திப்பாருங்கள்! இருதயத்தில் 10 அடைப்பு இருந்தாலும் காணாமல் போய்விடும்!