நல்ல அதிகாரிகளை நியமித்தால் மட்டும் போதாது! அவர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் தமிழக அரசை சாடும் பாஜக!

Photo of author

By Sakthi

கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தில் அந்த கட்சியின் மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், தேசிய செயற்குழு உறுப்பினர் சி பி ராதாகிருஷ்ணன், இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியன் உதட்டோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய, சிபி ராதாகிருஷ்ணன் இஸ்லாமிய பயங்கரவாதம் மறுபடியும் கோவையில் தலை தூக்கி இருக்கிறது என்பதை இந்த கார் குண்டு வெடிப்பு உணர்த்துகிறது. திமுக ஆளும் போது தான் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. மறுபடியும் அதுபோன்ற சதி கோவையில் நடைபெறவிருந்தது. அதிர்ஷ்டவசமாக அதன் மூளையாக இருந்தவர் பலியானார். கோட்டை ஈஸ்வரனால் கோவை காக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

உடனடியாக டிஜிபி சம்பவ இடத்திற்கு வந்ததை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் முறையான ஆய்வு செய்யாமல் அவசரகுதியில் சிலிண்டர் பிடித்ததால் விபத்து என்று அறிக்கை விட்டது. அவருடைய பொறுப்புக்கு சரியானது இல்லை. ஏன் வெடித்தது என்று காவல்துறை உற்றுநோக்கி இருக்க வேண்டும் சிறையில் இருக்கும் பயங்கரவாதிகளுடன் உயிரிழந்த நபர் தொடர்பில் இருந்ததை மறுக்க இயலாது. ஆகவே அவரை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து இருக்கிறது.

அதன் அடிப்படையில் காவல்துறை கண்காணித்திருக்க வேண்டும். இதில் தோல்வி அடைந்தது ஏன்? என காவல்துறை சிந்திக்க வேண்டுமென்றால். முதலமைச்சர் 3 நாள் அமைதியாக இருந்துவிட்டு இன்று தான் தூக்கத்தில் இருந்து விழித்ததை போல அறிக்கை விட்டுள்ளார். கேரள மாநிலத்தில் பலமாக இருக்கும் பி எஃப் ஐ அங்கே அமைதியாக இருந்துவிட்டு தமிழகத்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. தமிழக அரசு இஸ்லாமிய பயங்கரவாதத்தை கண்டும் காணாமல் இருக்கிறது. கடந்த கால வரலாற்றில் ஒரு பாடத்தை கண்டு கொள்ளாமல் இருக்கும் இயக்கம் திமுக மட்டுமே. ஓட்டை குறி வைத்து சமூகத்தின் மீது அக்கறையில்லாமல் இருக்கிறது திமுக என்று விமர்சனம் செய்திருக்கிறார்.

இஸ்லாமிய பயங்கரவாதிகள் கோவையை குறி வைக்கும் நோக்கம் பொருளாதாரத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை இருப்பது தான். கோவைக்கு அடுத்தது சென்னையாகத்தான் இருக்கும். இதனை மனதில் வைத்துக் கொண்டு முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். காவல்துறை அதிகாரிகள் கையை கட்டிப்போட்டு செயல்பட சொன்னால் எப்படி? டிஜிபி ஒரு சிறப்பான அதிகாரி ஆனால் அவசர கோலத்தில் செயல்பட்டுள்ளார். தற்போது 75 கிலோ வெடிபொருள் மட்டும் உயர்ந்ததாக தெரிவித்துள்ளார். இருந்தாலும் சற்றேறக்குறைய ஒன்னறை டன் வெடிபொருள் இருந்ததாக தகவல் கிடைத்துள்ளது.

காவல்துறை மூடி மறைக்காமல் முழு விபரத்தை வெளியிட வேண்டும். முழுமையான பயங்கரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். காவல்துறையால் தற்போது கைது செய்யப்பட்டுள்ள நபர்களின் தொடர்பு தமிழக எல்லையை கடந்து இருப்பதால் காவல்துறை தேசிய புலனாய்வு முகமையுடன் ஒத்துழைக்க வேண்டும் தமிழக அரசின் மெத்தனப் போக்கை கண்டித்தும் கோவையை காக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி அக்டோபர் மாதம் 31ஆம் தேதி முழு அடைப்புக்கு பாஜக அழைப்பு விடுத்திருக்கிறது. அதற்கு கோவை வியாபாரிகள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

உளவுத்துறையை சுதந்திரமாக செயல்பட விட்டாலே இவ்வளவு காவல் துறையினர் இங்கே குவிக்கப்பட வேண்டிய அவசியம் இருந்திருக்காது. நல்ல அதிகாரிகளை நியமனம் செய்தால் மட்டும் போதாது அவர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். தமிழக டிஜிபியின் திறமையை முழுமையாக வெளிப்படுத்த தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும். முழு அடைப்பிற்கு ஆதரவளிக்க திமுக வெளியிட்ட அனைத்து எதிர்கட்சியளிடமும் ஆதரவு கேட்கிறோம். காவல்துறை கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியான நபரின் வீட்டிலிருந்து எவ்வளவு வெடி பொருட்கள் கைப்பற்றினார்கள் என்பதை பொதுவெளியில் வெளியீடா விட்டாலும், தேசிய புலனாய்வு முகமையிடமாவது பகிர வேண்டும் என்று சிபி ராதாகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.