மின் கட்டணம் குறித்து தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Photo of author

By Rupa

Tamilnadu Gov: நாளை அனைத்து மின் வாரிய அலுவலகமும் இயங்கும் என தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் விவசாயிகளுக்கு முற்றிலும் கட்டணமில்லா மின்சாரம் தான். இவ்வாறு இருக்கையில் பொதுமக்களின் தேவைக்கேற்ப அவ்வபோது புதிய அப்டேட்களையும் தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் கடந்த முறை தனது வீடு அல்லது நிலத்தில் இருக்கும் கம்பங்கள் மாற்றுதல் அல்லது புதிய இணைப்பு என அனைத்திற்கும் கோரிக்கை வைக்கும் வகையில் செயலி ஒன்றை அறிமுகம் செய்தனர். இதனைத் தொடர்ந்து டிஜிட்டல் பரிவர்த்தனையை தாண்டி whatsapp மூலம் மின் கட்டணம் செலுத்தலாம் என்றும் கூறியிருந்தனர்.

அத்தோடு புதிய மின் இணைப்பு வேண்டுமென விண்ணப்பிபவர்களுக்கு குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்குள் இணைப்பு வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். இவ்வாறு இருக்கையில் தீபாவளி பண்டிகை முடிந்து அடுத்த நாள் பொது விடுமுறை அறிவித்ததால் பலரால் நேரடியாக சென்று மின்கட்டணம் செலுத்த முடியவில்லை. தற்பொழுது அதனை ஈடுகட்டும் விதமாக நாளை அலுவலகம் செயல்படும் என கூறியுள்ளனர்.

நேரில் சென்று மின் கட்டணம் செலுத்தும் நபர்கள் நாளை செல்லலாம் என கூறியுள்ளனர். மாதத்தில் 2 மற்றும் 4 வது சனிக்கிழமை அலுவலகம் இயங்கும் பட்சத்தில் தீபாவளி பொதுவிடுமுறை காரணமாக நாளை இயங்க உள்ளது. அதுமட்டுமின்றி திருட்டு மின் இணைப்பை யாரேனும் பெற்று வந்தால் அவர்கள் பற்றி புகாரளிக்கும் வகையிலும் சமீபத்தில் அவர்கள் வெளியிட்ட செயலியில் அப்டேட் செய்துள்ளனர்.