மாநில அரசு பணிக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.அதன்படி தமிழக அரசு மாவட்ட நுகர்வோர் குறைதீர் அலுவலகத்தில் “அலுவலக உதவியாளர்” பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வேலை வகை: தமிழக அரசு வேலை
நிறுவனம்: தமிழக அரசு மாவட்ட நுகர்வோர் குறைதீர் அலுவலகம்
பணி: அலுவலக உதவியாளர்
பணியிடம்: தமிழகம் முழுவதும்
காலிப்பணியிடங்கள்: இப்பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 23-05-2025
மாத ஊதியம்:
இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கல்வித் தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியத்தில் எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களுக்கு வயது வரம்பு 18 முதல் 34 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி
இந்த பணிக்கு தகுதி,விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தியிட்டு உரிய ஆவணங்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தேர்வு முறை: நேர்காணல் அடிப்படையில் பணியமர்த்தபட இருக்கின்றனர்.
முகவரி:
இப்பணிக்கு தகுதி இருப்பவர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.
தலைவர்,மாவட்ட குறைதீர் ஆணையம்,எண் 52,குமரன் கோவில் தெரு,திருவாரூர் 610001.