தமிழக அரசு வேலை.. 2500+ காலிப்பணியிடங்கள்! MBBS படித்தவர்களுக்கு முன்னுரிமை!

0
200
Tamil Nadu Government Jobs.. 2500+ Vacancies! Preference for MBBS Graduates!
Tamil Nadu Government Jobs.. 2500+ Vacancies! Preference for MBBS Graduates!

தமிழக அரசு வேலை.. 2500+ காலிப்பணியிடங்கள்! MBBS படித்தவர்களுக்கு முன்னுரிமை!

தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் காலியாக உள்ள “Assistant Surgeon” பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் வருகின்ற மே 15 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

வேலை வகை: தமிழக அரசு வேலை

நிறுவனம்: Tamil Nadu Medical Service Recruitment Board – MRB

பணி:

*Assistant Surgeon

காலிப்பணியிடங்கள்: இப்பணிக்கு 2553 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் MBBS படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது 37 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

மாத ஊதியம்: இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

*நேர்காணல்(Interview)

*எழுத்து தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

Assistant Surgeon பணிக்கு தகுதியும்,ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் https://mrbonline.in/ – என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு ஆன்லைன் வழியாக அனுப்பிவைக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணபக் கட்டணம்:

பொது பிரிவினருக்கு ரூ.1000/-

பட்டியலின/ பழங்குடியின பிரிவினருக்கு ரூ.500/-

கடைசி தேதி: விண்ணப்பம் செய்ய 15-05-2024 இறுதி நாள் ஆகும்.