தமிழக அரசு வேலை!! 12 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இந்த லிங்கை க்ளிக் செய்யுங்கள்!!

நம் தமிழக அரசுக்கு கீழ் செயல்பட்டு கொண்டிருக்கும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

அதன்படி தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இந்த பணிக்கான தகுதி,சம்பளம் உள்ளிட்ட விவரங்கள் இங்கு சொல்லப்பட்டுள்ளது.

வேலை வகை: தமிழக அரசு வேலை(ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை)

நிறுவனம்: தமிழக அரசு மாவட்ட ஊராட்சி மன்ற அலுவலகம்

காலியிடங்கள்: மொத்தம் 12 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

பணியிடம்: தென்காசி

பதவி:

1)ஊராட்சிகளுக்கான மாவட்ட வள அலுவலர்

இந்த பணிக்கு ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.MSW/MBA போன்ற படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.15,000 ஊதியம் தரப்படும்.

2)கணினி உதவியாளர்

இந்த பணிக்கு ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.22,000 ஊதியம் தரப்படும்.

3)வட்டார வள மைய பயிற்றுநர்

இந்த பணிக்கு மொத்தம் 10 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.15,000 ஊதியம் தரப்படும்.

விண்ணப்ப கட்டணம்: இப்பணிகளுக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை.

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

இப்பணிகளுக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் https://tenkasi.nic.in/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

விண்ணப்பம் செய்ய கடைசி தேதி: 30-05-2025