மத்திய பேரிடர் நிவாரண நிதி மற்றும் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிதி உதவிகளை வழங்குவதில் ஒரு சில மாற்றங்களை கொண்டு வந்து மத்திய அரசு சென்ற 2015ஆம் வருடம் ஆணை ஒன்றை பிறப்பித்தது.
இந்த சூழ்நிலையில், இது தொடர்பான வழக்கு ஒன்றில் கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஒரு ஆணையை பிறப்பித்தது, அதில் நோய்த்தொற்று காரணமாக குடும்பத்தினர் யாராவது பலியாக நேர்ந்தால் அந்த குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்குவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.
அதன் அடிப்படையில், நோய் தொற்றினால் உயிரிழப்பு உண்டாகும்போது அந்த குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு வழங்கப்படவேண்டிய நிவாரணம் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது.
அத்துடன் கடந்த 2015ம் வருடம் ஒதுக்கப்பட்ட வேண்டிய இலவச நிவாரண உதவி என்பதில் உச்சநீதிமன்ற உத்தரவுபடி திருத்தங்களை கொண்டு வந்தது. அதாவது ஒரு குடும்பத்தில் ஒருவர் நோய் தொற்றினால் பாதிப்படைந்து உயிரிழந்தால் அது நோய் தொற்றினால் ஏற்பட்ட மரணம் என்பதை உறுதி செய்ததை அடுத்து அவருடைய குடும்பத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவியை கொடுக்கலாம் என்று தெரிவித்திருந்தது.
நோய் தொற்று காரணமாக, குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மரணமடைந்த சூழ்நிலையில், முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து 25 லட்சம் முன் களப்பணியாளர்கள் உள்ளிட்டவர்கள், இரண்டு பெற்றோர்களையும் இழந்தவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் அல்லது பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு 3 லட்சம் ரூபாய் பெற்றவர்களுக்கு இந்த அரசு ஆணை பொருந்தாது என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. நோய் தொற்று காரணமாக, தமிழ்நாட்டில் நேற்று வரையில் 36 ஆயிரத்து 539 பேர் மரணம் அடைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.