Bike taxi: மோட்டார் வாகன விதிப்படி வணிக ரீதியாக பயன்படுத்தும் இருசக்கர வாகனங்களை சோதனை செய்ய தமிழக அரசு உத்தரவு.
ஆட்டோ மற்றும் கார்களில் உள்ளது போல பைக் டாக்ஸிகள் செயல்பட்டு வருகிறது.ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மிக விரைவாக செல்லவும், வாகன போக்குவரத்தில் சிக்காமல் பணிக்கவும் பொது மக்கள் பெரும்பாலும் பைக் டாக்லியை பயன்படுத்த விரும்புகிறார்கள். இந்த பைக் டாக்ஸி வருகைக்கு பிறகு சென்னையில் ஆட்டோ ஓட்டுனர்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
மேலும் இந்த பைக் டாக்ஸி ஓட்டுனர்கள் பயன்படுத்தும் இருசக்கர வாகனங்களுக்கு முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாமல் இயக்குவதாகவும், பைக்கில் பயணிக்கும் வாடிக்கையாளர்களுக்கு என தனி இன்சூரன்ஸ் எடுக்காமல் வாகனத்தை பயன்படுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. எனவே அதன் அடிப்படையில் சோதனை இன்று முதல் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்து இருக்கிறது.
இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்து இருக்கிறார். அதில், வணிக சேவைக்காக பயன்படுத்தும் வாகனங்களுக்கு yellow board, white board என வாகனங்கள் வித்தியாசப்படுத்திக் காட்டுவதற்கு நம்பர் பிளேட் இருக்கும். ஆனால், இந்த முறையை பயன்படுத்தாமல் இருக்கிறது பைக் டாக்ஸி நிறுவனங்கள்.
மேலும் இந்த பைக் டாக்ஸி சேவைக்கு ஓட்டுபவர்கள் ஓட்டுநர் உரிமை மற்றும் இன்சூரன்ஸ் வைத்து இருப்பது இல்லை எனவே இன்று தீவர தணிக்கை நடக்கும் என தகவல் வெளியிட்டு இருக்கிறார். இதனால் தமிழ் நாட்டில் பிரபலமாக இருக்கும் ராபிடோ மற்றும் ஓலா போன்ற நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கும்.