கல்லூரி பயிலும் மாணவிகளுக்கு ஒவ்வொரு மாதம் ரூ.1,000 வழங்கும் தமிழக அரசு!! உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!
அரசுப் பள்ளியில் பயின்று மேற்படிப்பை மேற்கொள்ளும் மாணவிகளுக்கு தமிழக அரசு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ்(புதுமைப்பெண்) மாதம்தோறும் ரூ.1,000 வழங்கி வருகிறது.மாணவிகளின் கல்வித்தரம் உயர வேண்டுமென்ற நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பொருளரத்தில் பின்தங்கிய குடும்பத்தில் உள்ள ஏழை மாணவிகளுக்கு உயர்கல்வி என்பது நிறைவேறாத கனவாக இருந்து வருகிறது.பொருளாதார சூழலை கருதி மாணவிகளின் பெற்றோர் 18 வயது நிரப்புவதற்கு முன்னரே திருமணம் செய்து வைத்துவிடுகின்றனர்.இதனால் மேற்படிப்பு பயின்று நல்ல வேலைக்கு செல்ல வேண்டுமென்ற மாணவிகளின் கனவு கேள்விக்குறியாகி விடுகிறது.மாணவிகளின் உயர்கல்வி கனவை நனவாக மற்றும் குழந்தை திருமணத்தை தடுக்க தமிழக அரசு புதுமைப்பெண் என்ற திட்டத்தை தொடங்கி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் ரூ.1,000 வழங்கப்படுவது போல் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ்(புதுமைப்பெண்) பள்ளி மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்ப்படுகிறது.
புதுமைப்பெண் திட்டத்திற்கு யாரெல்லாம் விண்ணப்பம் செய்யலாம்?
6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற பழங்குடியினர் நல பள்ளி கள்ளர் சீர் மரபினர் பள்ளி,பஞ்சாயத்து யூனியன் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி,ஆதிதிராவிடர் நல்ல பள்ளி,நகராட்சி மாநகராட்சி பள்ளி,பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல்ல பள்ளி மாற்று திறனாளிகள் நலத்துறை பள்ளி,வனத்துறை பள்ளி,சமூக பாதுகாப்பு துறை பள்ளியில் படித்த மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.
அதேபோல் இலவச கட்டாயக் கல்வி(ஆர்டிஎம்) மூலம் 8 ஆம் வகுப்பு வரை தனியார் பள்ளியில் படித்து பின்னர் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவிகளும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பம் செய்யலாம்.WWW.pudhumaipenn. tn. Gov. In, www.penkalvi.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக புதுமைப்பெண் திட்டத்திற்கு விண்ணப்பம் செய்யலாம்.