தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்! முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்ட உத்தரவு!
தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது அந்த அறிவிப்பில் தமிழ்நாட்டில் சிறப்பான மற்றும் திறமையான போக்குவரத்து சேவைகளை பொதுமக்களுக்கு வழங்குவதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தான் முக்கிய பங்காற்றி வருகின்றது.இந்தியாவிலேயே தமிழ்நாடு போக்குவரத்து கழகங்கள் தான் பயணிகள் அடர்வு,பேருந்து பயன்பாடு மற்றும் எரிபொருள் செயல்திறன் போன்றவற்றில் சிறந்து விளங்குகின்றது.
மேலும் கிராமம் முதல் மாநகரங்கள் உட்பட மக்கள் குடியிருக்கும் அனைத்தி இடங்களுக்கும் தங்கு தடையின்றி போக்குவரத்து சேவை வழங்கப்பட்டு வருகின்றது.தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகங்கள் தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம்,பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு ஆகிய அனைத்தும் நிருவனக்க்ளைளும் தற்போது வரை சுமார் ஒரு லட்சம் பணியாளர்கள் பணியில் உள்ளனர்.
முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்ட உத்தரவின் பேரில் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள்,தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனங்கள் மற்றும் பல்லவன் போக்குவரத்து அறிவுரை பணிக்குழு ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்களில் கடந்த 2022 ஆம் ஆண்டில் 91 நாட்கள் மற்றும் அதற்கு மேலும், 151 நாட்களுக்கும் குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு 85 ரூபாயும்,151 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் ஆனால் 200 நாட்களுக்கு குறைவாக பணியாற்றி ஊழியர்களுக்கு 195 ரூபாயும்,200 மற்றும் அதற்கு மேல் பணிபுரிந்த ஊழியர்களுக்கு 625 ரூபாய் வீதமும் பொங்கல் சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும்.
மேலும் இதன் மூலம் போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 129 பணியாளர்களுக்கு மொத்தம் 7 கோடியே ஒரு லட்சம் ரூபாய் சாதனை ஊக்கத்தொகை வழங்க்கபடுகின்றது.