தமிழக அரசின் அசத்தல் திட்டம்! இன்று முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும் தொடக்கம்!
அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள், நம்ம ஸ்கூல் என்ற திட்டத்தை இன்று தொடங்கி வைத்துள்ளார். முன்பு அரசு பள்ளியில் படித்து தற்பொழுது பெரிய பதவிகளில் மற்றும் பொறுப்புகளில் இருக்கும் நபர்கள் தாமாக முன்வந்து அவரவர் படித்த அரசு பள்ளிகளுக்கு தங்களால் இயன்ற உதவியை செய்யும் நோக்கில் தான் நம்ம ஸ்கூல் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் முன்னாள் மாணவர்கள் அரசு பள்ளிகளின் கட்டமைப்புகளை மேம்படுத்தவும் மேலும் பள்ளிகளுக்கு வர்ணம் பூசுதல், இணை வசதி ஏற்படுத்தி தருதல் போன்ற எண்ணற்ற உதவிகளை செய்யலாம் என கூறியுள்ளார்.
அதேபோல இவர்கள் இதை அனைத்தையும் நேரடியாக வந்து செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதற்கு மாற்றாக இதற்கு என்று ஓர் பிரத்தியேக இணையதளம் ஒன்று உருவாக்கி உள்ளனர்.
அதில் தங்களால் இயன்ற பணத்தை செலுத்தி விடலாம், அதேபோல தம் எவ்வளவு பணம் செலுத்தினோம் அதில் எந்தெந்த வேலைகள் நடக்கிறது என்பது குறித்தும் அவ்வபோது கண்காணித்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். நம்ம ஸ்கூல் திட்டம் குறித்து பிரத்தியேக முறையில் இந்த இணையதளம் உருவாக்கி உள்ளதாக கூறுகின்றனர்.
மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு நாளடைவில் சிபிஎஸ்இ பாடங்களுக்கு இணையாக அரசு பள்ளிகளும் பாடத்திட்டங்கள் கொண்டுவரப்படும் என உறுதியளித்துள்ளார்.அந்தவகையில் முன்னாள் மாணவர்கள் அனைவரையும் சேர்க்கும் பொருட்டு நம்ம ஸ்கூல் திட்டத்தை இன்று முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார்.