தமிழக அரசின் “டபுள் ஜாக்பாட்”.. அகவிலைப்படி உயர்வு!! போக்குவரத்து ஊழியர்களுக்கு வரும் குட் நியூஸ்!!
தமிழக அரசின் மீது போக்குவரத்து ஊழியர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை சுமத்துவது போராட்டம் நடத்துவது உள்ளிட்டவற்றை சமீபகாலமாக பார்த்து வருகிறோம். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை அண்ணாநகர் பணிமனை சேர்ந்த ஊழியர் ஒருவர் காப்பீட்டு தொகைக்காக அரசு பிடிக்கும் தொகையானது முறையாக செலுத்தவில்லை. கிட்டத்தட்ட ஆறு மாதத்திற்கு பிடித்தம் செய்யப்பட்ட 15 ஆயிரம் ரூபாய் எல்ஐசிக்கு செலுத்தாததால் எனக்கு நோட்டீஸ் வந்துள்ளது.
இந்த பணம் எங்கே சென்றது. இது அனைத்திற்கும் சம்பள பட்டுவாடா அதிகாரி தான் காரணம் என்று புகார் அளித்தார். அதுமட்டுமின்றி இதேபோல மற்ற தொழிலாளிகள் பணமும் கையாடல் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். ஆனால் இந்த புகார் மீது பெரிய அளவில் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து அகவிலைப்படி உயர்த்தி தருமாறு கேட்டு போக்குவரத்து ஊழியர்கள் கேட்டு வந்தனர். வருடம் தோறும் 4% அகவிலைப்படி உயர்வு என்பது கட்டாயம்.
ஆனால் மற்ற துறைகளுக்கு அகவிலைப்படி உயர்த்திய நிலையில் போக்குவரத்து கழகத்திற்கு மட்டும் எந்த ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை. இதுகுறித்து தமிழக அரசிடம் தற்பொழுது மனு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை குறித்து தமிழக அரசு ஆலோசனை செய்து வருவதாக கூறுகின்றனர். அந்த வகையில் விரைவிலேயே அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருடத்திற்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்வு என்பதால் நிலுவையில் உள்ள அகவிலைப்படி தொகையும் இதனுடன் சேர்த்து வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறுகின்றனர். அதன்படி பார்க்கையில் போக்குவரத்து ஊழியர்களுக்கு இரண்டு பெரிய அறிவிப்புகள் வெளிவர உள்ளது.