விடிய விடிய அவசரமாக டெல்லிக்கு புறப்பட்ட தமிழக ஆளுநர்! உள்துறை அமைச்சரை சந்திப்பாரா?

0
174

தமிழகத்திற்கு ஆளுநராக நியமனம் செய்யப்பட்ட ஆர்.என். ரவி அவர்களுக்கும் தமிழக அரசுக்கும் கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது தமிழக பாஜக நிர்வாகிகள் தமிழக அமைச்சர்கள் மீதான புகார் குறித்து அவ்வப்போது ஆளுனரை சந்தித்து தெரிவித்து வருகிறார்கள்.

நடிகர் ரஜினிகாந்த் ஆளுநர் மாளிகைக்குச் சென்று அவருடன் அரசியல் பேசியதாக தெரிவித்திருந்தார் இந்த நிலையில் அரசு சார்பாக நடைபெறும் நிகழ்ச்சிகளில், தமிழக ஆளுநர் ஆர்.எஸ்எஸ் சித்தாந்தங்களை புகுத்துவதாக திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் புகார் தெரிவித்தனர்.

தமிழக அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஆளுநரை மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. அதோட திருக்குறளை அரசியலுக்காக ஒரு சிலர் பயன்படுத்துகிறார்கள் ஆன்மீகம் மற்றும் நீதி சாஸ்திரம் தொடர்பாக இந்த புத்தகம் பேசுகிறது ஆனால் இந்த புத்தகத்தை வெறும் வாழ்க்கை நெறிமுறை புத்தகமாக மட்டும் காட்ட நினைப்பதாக ஆளுநர் தெரிவித்திருந்தார்.

இது போன்ற பல்வேறு கருத்துகளால் தமிழக அரசு மற்றும் ஆளுநர் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. அதோடு பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் செய்வது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கும் வகையில் சட்ட மசோதா, நீட் விலக்கு மசோதா போன்ற பல்வேறு மசோதா ஆளுநரின் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு எந்த விதமான ஒப்புதலும் வழங்காமல் ஆளுநர் காக்க வைப்பதாகவும் திமுக குற்றம் சுமத்தியுள்ளது.

இந்த நிலையில் தான் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று காலை டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். அங்கே தமிழக ஆளுநர் மத்தியில் துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் இதனை ஆளுநர் மாளிகை மறுத்துள்ளது. தன்னுடைய மனைவியுடன் அவர் டெல்லி சென்றுள்ளதாகவும், அங்கு தன்னுடைய குடும்ப நிகழ்ச்சியில் ஆளுநர் பங்கேற்க இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Previous articleதமிழகத்தில் பெண்கள் சேலை உடுத்துவது தவறா? கனிமொழியின் பேச்சால் பரபரப்பு!
Next articleஎன்னய்யா இது வம்பா போச்சு!ப்ளீஸ் மன்னிச்சுக்கோங்க வருத்தம் தெரிவித்த பொன்முடி!