Breaking News, Chennai, District News, State

மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் தொடக்கம்

Photo of author

By Janani

மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் தொடக்கம்

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேற்று வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் 2 லட்சம் ஏக்கரில் ரூபாய் 20 கோடி நிதி ஒதுக்கீட்டில் 4000 மெட்ரிக் டன் பசுந்தாள் உர விதைகளை விவசாயிகளுக்கு வழங்கி மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.மேலும் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக வேளாண்மை பொறியியல் துறை சார்பில் குறைந்த வாடகையில் டிராக்டர்கள், கொத்துக்கலப்புகள் மற்றும் ரோட்டவேட்டர்களை வழங்கிடும் வகையிலும், கிராமப்புற இளைஞர்களுக்கு டிராக்டர் இயக்குவதற்கு பயிற்சி அளிக்கும் வகையிலும் கொடி அசைத்து டிராக்டர்களை தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் முதல்முறையாக வேளாண்மை துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து, வேளாண்மை துறை என்ற பெயரை வேளாண்மை உழவர் நலத்துறை என மாற்றம் செய்து உழவர்களின் வருவாயை உயர்த்திட கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

மேலும் இந்த மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் 2024 – 2025 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் 206 கோடி ரூபாயில் 22 இனங்களுடன் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இத்திட்டத்தின் மூலம் பசுந்தாள் உரவிதை விநியோகம் செய்யப்பட்டு, அதன் மூலம் மண்வளம் காக்கப்பட்டு, மண்ணில் வாழும் நுண்ணுயிர்கள் பாதுகாக்கப்பட்டு, உயிர்மமுறையில் மண்ணின் சத்துக்கள் அதிகரிக்கப்படும். இதனால் வேளாண்நிலைப் பொருட்களின் தரம் மேம்பட்டு மக்களின் நலம் காக்கபடும்.

அதன்படி முதற்கட்டமாக 2024- 2025 ஆம் ஆண்டில் இரண்டு லட்சம் ஏக்கரில் 20 கோடி மதிப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

அடிக்கடி உங்கள் முகம் சிவந்து எரிச்சலாகி விடுகிறதா? இவ்வாறு செய்யுங்கள்.. உடனே க்யூராகிவிடும்!!

ஃபேஸ்புக் மெசஞ்சரில் விரைவில் கம்யூனிட்டி அறிமுகம்