தமிழக அரசே விஜய் மாநாட்டிற்கு பாதுகாப்பை உறுதி செய்!! தவெக மாநாட்டிற்கு ஆதரவு அளித்த பாஜக!!

Photo of author

By Vijay

தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு வாழ்த்து தெரிவித்த பாஜக .
நாளை விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி “வி சாலையில்” தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டிற்கான கடைசி கட்ட பணிகள் நிறைவு பெற்று உள்ளதாக  தமிழக வெற்றிக் கழக உயர் மட்ட நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர் .

நடிகர் விஜய் சினிமாவில்  இருந்து தன்னை விளக்கி கொண்டு முழுநேர அரசியலில் இறங்க உள்ளார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே . கடந்த பிப்ரவரி  மாதம் நடிகர் விஜய் அவர்கள் தனது  தமிழக வெற்றிக் கழக அரசியல் கட்சி மற்றும் கட்சி கொடியை அறிமுகம் செய்தார்.  இவரின் அரசியல் கட்சிக்கு ஆதரவு  விமர்சனங்கள் பொது மக்களாலும் ,அரசியல் கட்சி தலைவர்களாலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பிற  நடிகர்களின் ரசிகர்கள் சார்பாக மாநாட்டிற்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.  மேலும் சமீபத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன்  விஜய் மாநாட்டிற்கு ஆதரவு தெரிவித்தார்.  இதை தொடர்ந்து  விஜய் மாநாடு இடையூறு இன்றி நடைபெற தமிழக அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது பாஜக .

மேலும் தவெக புதிய அரசியல் பாதையை உருவாக்கி, முன் மாதிரியாக விளங்க வேண்டும் என்று தனது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறது பாஜக.  இந்த வாழ்த்து வருகின்ற 2026-இல் பாஜக, தவெக கூட்டணி இருக்கும் என்ற கோணத்தில்  அமைந்துள்ளது என்று  விமர்சனங்கள் எழுந்துள்ளன.