முன்னாள் முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 4 ஆம் தேதி மாலையே இறந்துவிட்டார் என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் ஒரு பரபரப்புத் தகவலை தெரிவித்து இருக்கின்றார்.
மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கல்வித்துறையில் உரிய நடைமுறையை தமிழக அரசு நடைமுறைப்படுத்தவில்லை. ஏசி அறையில் உட்கார்ந்துகொண்டு பள்ளி தீர்ப்புகள் சம்பந்தமாக, பேசிக்கொண்டிருப்பது சரியல்ல அரசியலில் யாரும் தீண்டத்தகாதவர்கள் இல்லை ஸ்டாலினை பாராட்டிய போது நான் திமுகவில் இணையபோவதாக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்தார். நல்லதை யார் செய்தாலும் பாராட்டுவேன் என்று தெரிவித்திருக்கின்றார் திவாகரன்.
சசிகலா தொடர்பான கேள்விகளுக்கு, சசிகலாவிற்கு தண்டனை காலம் முடிவடைந்துவிட்டது. விரைவிலேயே அவர் விடுதலையாகி விடுவார் அவர் வெளியே வந்த பின்னர்தான், அரசியல் மாற்றம் குறித்து தெரியும் சசிகலா முதலமைச்சராக பதவி ஏற்க வேண்டாம் என்று கூறியிருக்கிறேன். சசிகலாவை சுற்றி அநேக சதி நடைபெற்று வருகின்றது.
ஜெயலலிதா இறந்த உடன் மூன்று நபர் முதல்வராக வேண்டும் என்று முயற்சி செய்தார்கள். சசிகலா அவர்கள் கொடுத்த வேலையை எடப்பாடி பழனிச்சாமி மிகச் சிறப்பாகக் கையாண்டார். சசிகலா சம்பந்தமாக முதல்வரும் துணை முதல்வரும் இதுவரை எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை சசிகலாவை விமர்சிப்பவர்களுக்கு டெபாசிட் கூட கிடைக்காது என்று தெரிவித்திருக்கின்றார் திவாகரன்.