தருமபுரியில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் பாமக! வெற்றி வாகை சூடுவாரா சௌமியா அன்புமணி?

0
408
Sowmiya Anbumani Ramadoss
Sowmiya Anbumani Ramadoss

தருமபுரியில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் பாமக! வெற்றி வாகை சூடுவாரா சௌமியா அன்புமணி?

நடந்து முடிந்த மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையானது இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அந்தவகையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக கூட்டணியானது 38 தொகுதிகளிலும், பாஜக கூட்டணியில் போட்டியிடும் பாமக 1 தொகுதியிலும், அதிமுக 1 தொகுதியிலும் முன்னிலை வகித்து வருகிறது.

அந்த வகையில் தருமபுரி தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் சௌமியா அன்புமணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். இதே தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஏ.மணி இரண்டாம் இடத்திலும், அதிமுக வேட்பாளர் ஆ.அசோகன் மூன்றாம் இடத்தையும் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்கள்.

இந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் அங்கம் வகித்த பாமக 10 மக்களவை தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் அக்கட்சியின் நம்பிக்கைக்குரிய தொகுதியான தருமபுரி தொகுதியின் மீது அதீத கவனமும் செலுத்தப்பட்டது. பாமக தலைவரான அன்புமணி ராமதாஸ் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றி தொகுதியான தருமபுரி தொகுதியில் இந்த முறை அவரின் மனைவியும், பசுமை தாயகத்தின் தலைவருமான சௌமியா அன்புமணி போட்டியிட்டார்.

அந்த வகையில் அக்கட்சியினர் முதல் மாற்று கட்சியினர் வரை அனைவரும் கவனிக்கும் தொகுதியாக தருமபுரி விளங்கியது. குறிப்பாக தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்பில் குறைந்த வித்தியாசத்தில் பின்னடைவாக குறிப்பிட்ட பாமக தற்போது தொடர்ந்து முன்னிலை வகித்து வருவது அக்கட்சியினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.