தென் கொரியாவில் இருந்து தமிழக காவல்துறையினரின் இணையதளம் முடக்கம்!!! நல்லா டிரெய்னிங் எடுத்த சைபர் குற்றவாளிகளா இருப்பாங்க போல!!!

Photo of author

By Sakthi

தென் கொரியாவில் இருந்து தமிழக காவல்துறையினரின் இணையதளம் முடக்கம்!!! நல்லா டிரெய்னிங் எடுத்த சைபர் குற்றவாளிகளா இருப்பாங்க போல!!!

தென் கொரியா நாட்டில் இருந்து இந்திய நாட்டில் தமிழக மாநில காவல்துறையினரின் இணையதளத்தை சைபர் குற்றவாளிகள் முடக்கியது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் தமிழக மாநிலத்தில் காவல் துறையினரின் இணையதளம் கிரைம் மற்றும் கிரிமினல் டிராக்கிங் என்ற பெயரில் அதாவது சி.சி.டி.என்.எஸ் என்ற பெயரில் செயல்பட்டு வருகின்றது. இந்த இணையதளத்தை சைபர் குற்றவாளிகள் தென் கொரியா நாட்டில் இருந்து முடக்கியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து இணையதளம் முடக்கப்பட்டது தொடர்பாக உரிய விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறி இருக்கிறார். இது போல இனிமேல் யாரும் எவராலும் இணையதளத்தை முடக்க முடியாத அளவுக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று காவல்துறையின் உயர் அதிகாரகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முடக்கப்பட்ட இணையதளத்தில் மாநிலம் முழுவதும் வேலை செய்யும் காவல் துறையினரின் சம்பளம் தொடர்பான விவரங்கள் இடம்பெற்றுள்ளது. இதைத் தவிர காவல்துறை தொடர்பான பல தகவல்கள் முடக்கப்பட்ட இணையதளத்தில் இருந்தது.

நேற்று(செப்டம்பர்11) காலை முடக்கப்பட்ட இணையதளம் இரவு தான் சரிசெய்யப்பட்டுள்ளது என்று காவல்துறையினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தென் கொரியாவில் இருந்து காவல்துறையினரின் இணையதளத்தை முடக்கியது யார் என்பது பற்றிய விசாரணை நடைபெற்று வருகின்றது.