குரூப் 1 தேர்வு முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்ற தேர்வர்கள் வரும் எட்டாம் தேதி முதல் 16ஆம் தேதி வரை தங்களுடைய அசல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அரசு இ சேவை மையங்கள் மூலமாக இச்சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய தேர்வர்களை அரசு பணியாளர் தேர்வாணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் முதன்மை எழுத்து தேர்விற்கு தேர்வு கட்டண விலக்கு பெறாத தேர்வர்கள் முதன்மை தேர்வுக்குறிய தேர்வு கட்டணமாக 200 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 15ஆம் தேதிக்குள் தேர்வு கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வர்கள் அசல் சான்றிதழ்களை குறிப்பிட்ட தேதிகளுக்குள் பதிவேற்றம் செய்யப்படவில்லை என்றால் அவர்கள் முதன்மை தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.