தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு! குரூப் 5ஏ தேர்விற்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தமிழகம் முழுவதும் உள்ள தலைமை செயலகத்தில் பிரிவு அலுவலர் மற்றும் உதவியாளர் உள்ளிட்ட 161 காலி பணியடங்கள் நிரப்ப உள்ளது. இந்த பணியில் சேர விரும்புவர்கள் குரூப் 5 ஏ என்ற தேர்வு எழுத வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.
இந்த தேர்விற்காக விண்ணப்பிக்க தகுதி தமிழ்நாடு அமைச்சகத்தில் அஞ்சல் அல்லது ஜூனியர் உதவியாளர் அல்லது உதவியாளர் சேவையில் உள்ளவர்கள் மற்றும் தமிழ்நாட்டில் நீதித்துறை அமைச்சகத்தில் சேவை புரிந்திருக்க வேண்டும். மேலும் தகுதி உள்ளவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் இன்று முதல் செப்டம்பர் 21 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இதனை தொடர்ந்து செப்டம்பர் 26ல் இருந்து 28 ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த தேர்விற்கான எழுத்து தேர்வு டிசம்பர் 18 ஆம் தேதி நடைப்பெறும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.