க்யூட் நுழைவு தேர்வை தமிழக மாணவர்கள் எழுத வாய்ப்பில்லை? மார்ச் 12 ஆம் தேதி வரை காலவகாசம்!
நாட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழங்களில் இளங்கலை, முதுகலை படிப்புகளில் சேர்வதற்கு மத்திய பல்கலைக்கழக பொது நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. 2022 -23 நடப்பு கல்வியாண்டின் புதிய கல்விக் கொள்கையின் படி மத்திய பல்கலைக்கழங்களில் இளங்கலை படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கான க்யூட் தேர்வு நடத்தப்படுகின்றது.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை ஆறு கட்டங்களாக தேசிய தேர்வு முகமையால் நடத்தப்பட்டது. மேலும் நாடு முழுவதும் 44 மத்தியப் பல்கலைக்கழகங்கள், 12 மாநில பல்கலைக்கழகங்கள், 11 தன்னாட்சிப் பல்கலைக்கழகங்கள், 19 தனியார் பல்கலைக்கழகங்கள் என மொத்தம் 90 பல்கலைக் கழகங்களில் 54,555 இடங்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படுகின்றது.
மேலும் இந்த க்யூட் தேர்விற்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் தேவை என்பதால் தமிழக மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை நிலவி வருகின்றது. கொரோனா காலகட்டத்தில் 2021 ஆம் ஆண்டு பொது தேர்வுகள் நடைபெறாமல் மாணவர்கள் தேர்ச்சி செய்யப்பட்டனர்.
தமிழக மாணவர்களால் தற்போது மதிப்பெண்கள் குறிப்பிட முடியவில்லை. மார்ச் 12 ஆம் தேதி வரை இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என காலவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு தலையிட்டு விலக்கு பெற்று தர மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். முன்னதாக ஜேஇஇ தேர்வுக்கு இதே சிக்கல் எழுந்தது. அப்போது தமிழக மாணவர்களுக்கு அதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.