நீட் தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த மாணவர்! குவியும் பாராட்டுகள்!

0
213
Tamil Nadu topper in NEET exam! Accumulating praise!
Tamil Nadu topper in NEET exam! Accumulating praise!

நீட் தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த மாணவர்! குவியும் பாராட்டுகள்!

மருத்துவ படிப்பிற்கு நுழைவு தேர்வாக நீட் தேர்வு நடத்தப்படுகிறது.அந்த வகையில் நடப்பு கல்வியாண்டுக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் 17 தேதி நடந்தது. இந்த தேர்வில் நாடு முழுவதும் 18 லட்சத்து 72 ஆயிரம் பேர் பதிவு செய்தனர்.

இந்நிலையில் நீட் தேர்வு முடிவு நேற்று முன்தினம்  இரவு 11 மணிக்கு வெளியானது. மேலும் ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.நடப்பாண்டில் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகம். ஆனால் தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டின் தேர்ச்சி சதவீதத்தைவிட குறைவு.

இந்நிலையில் மதுரையை சேர்ந்த மாணவர் திரிதேவ் விநாயகா மதுரை வீடபாஞ்சானில் உள்ள மகாத்மா குளோபல் கேட்வே சிபிஎஸ்இ பள்ளி மாணவர்.இவர் நீட் தேர்வு எழுதினார் அதில் 720 மதிப்பெண்க்கு  705 மதிப்பெண் பெற்று தமிழக அளவில் முதலிடமும் தேசிய அளவில் 30 வது இடமும் பெற்றுள்ளார்.

மேலும் நாமக்கல் கிரீன்பார்க் நீட் பயிற்சி மையத்தில் பயின்ற ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த மாணவர் ஆர்.வி.சுதர்சன் 720 மதிப்பெண்க்கு  700 மதிப்பெண் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.

Previous articleமுதலமைச்சர் பங்கேற்ற விழாவில் அனுமதி மறுக்கப்பட்ட திமுக மாமன்ற உறுப்பினர்கள்! இறுதியாக என்ன நடந்தது தெரியுமா?
Next articleஇந்த மாவட்டத்தில் இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு 144தடை உத்தரவு! மாவட்ட நிர்வாகம் அதிரடி அறிவிப்பு!