சிலிண்டர் வெடிப்பு விபத்தில் முதலிடம் பிடித்த தமிழகம் !!

Photo of author

By Parthipan K

இந்தியாவில் தமிழகம் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த சம்பவங்களில் முதலிடம் பிடித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட இழப்புகள் குறித்து தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கையை வெளியிட்டது.

அதில் 2019-ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் ஏற்பட்ட சிலிண்டர் வெடித்து விபத்து குறித்து ஆய்வு செய்ததில், தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டுமே தமிழகத்தில் சிலிண்டர் விபத்தில் மட்டும் 346 பேர் உயர்ந்துள்ளனர். அதில் 96 ஆண்களும் 250 பெண்கள் ஆவர். சிலிண்டர் வெடித்ததில் இறந்தவர்களின் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் கர்நாடகாவும், மூன்றாவது இடத்தில் மகாராஷ்டிராவின் உள்ளனர்.

மாநில அரசுகள் எரிவாயு சிலிண்டர் முறையாக பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும் அலட்சியமாக இருப்பதே, இதுபோன்ற விபத்துக்கு காரணமாக இருக்கிறது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.