தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் அவர் அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அந்த வகையில், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதைதொடர்ந்து அவர், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி, அவரின் மனைவி மற்றும் மகனுக்கும் கொரோனா தொற்று உறுதியானது.
இதுவரை அதிமுகவில் 5 அமைச்சர்கள் உற்பட 16 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மற்றும் திமுகவில் 15 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.