மத்திய அரசு பணிகளை தமிழக இளைஞர்கள் புறக்கணிப்பு !!

Photo of author

By Parthipan K

தமிழகத்தில் செயல்பட்டு வரும் மத்திய ஜி.எஸ்.டி, கலால் வரி உள்ளிட்ட பணிகளில் தமிழக இளைஞர்கள் எதிர்த்து வருகின்றனர்.

மத்திய அரசு பணிக்கான கலால் வரி , ஜிஎஸ்பி அலுவலகம் உள்ளிட்ட நியமனங்களில் 196 இடங்களில் ,தமிழர்களுக்கு குறைந்த அளவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக இளைஞர்கள் கூறியுள்ளனர்.2017-ல் நடைபெற்ற தேர்வில் வெற்றி பெற்ற 197 மேற்பட்டவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.197 பேரில் 20 சதவீதத்துக்கும் குறைவாகவே தமிழகத்தில் சேர்ந்தவர்கள் ஆவர்.

மத்திய அரசுப் பணிகளில் பெரும்பாலானோர், வட இந்தியாவில் சேர்ந்த டெல்லி ,பீஹார், ஹரியானா ,உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சேர்ந்தவர்கள் ,அதிகமாக நியமிக்கப்படுகின்றனர். கடந்த 8 ஆண்டுகளில் 60 ஆயிரம் இடங்களில் தென்னிந்தியாவில் சேர்ந்தவர்களுக்கு, ஒரு சதவீதம் கூட பணியமர்த்தபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வட இந்தியாவில் நடைபெறும் தேர்வுகள் குறித்து பல்வேறு நடைமுறைகள் அம்பலமாகி வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில், திட்டமிட்டு வடஇந்தியர்களை பணியமர்த்த படுகிறார்கள் என குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் தமிழக இளைஞர்கள் மத்திய அரசு பணிகளை புறக்கணித்துள்ளனர். மேலும் இதற்கு பல தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.