தமிழகத்தின் திக் திக் நிமிடங்கள்! கோட்டையை வெள்ளப்போவது யார்?
தமிழக சட்டமன்ற தேர்தல் 234 தொகுதிகளிலும் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடந்து முடிந்தது.இந்த தேர்தலின் முடிவுகள் நாளை வர இருக்கிறது.முடிவுகளை எதிர்நோக்கி மக்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.முடிவுகள் வெளியிடுவதில் பலவித தடைகளை உயர் நீதிமன்றமும்,தேர்தல் ஆணையமும் அமல்படுத்தியுள்ளது.அந்தவகையில் வாக்கு எண்ணுபவர்கள் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும்.அதனுடன் கொரோனா தடுப்பூசியையும் செலுத்திக்கொள்ள வேண்டும்.வேட்பாளர்கள்,வாக்கு எண்ணும் ஊழியர்கள்,அரசு அதிகாரிகள் தவிர வெளி நபர்கள் வெளியே காத்திருக்க தடை விதித்துள்ளனர்.
அதற்கடுத்ததாக வெற்றி முடிவின் காரணமாக ஊர்வலம் செல்வது,பட்டாசுக்கள் வெடிப்பதற்கு முற்றிலும் தடை விதித்துள்ளனர்.இவ்வாறு பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தி நாளை வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது.தமிழ்நாட்டில் நாளை 11 மணியளவில் திக் திக் நிமிடங்களாக இருக்கும் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை.
அதுமட்டுமின்றி தேர்தல் முடிவுகள் வெளிவரும் முன்னே பல கருத்து கணிப்புகள் வெளிவந்தது.அதில் பெரும்பான்மையாக திமுக வெற்றி பெரும் என கூறுகின்றனர்.ஆனால் இதனை எதிர்த்து முன்னால் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்.கூறியதாவது,தற்போது வெளிவந்துள்ள கருத்துகணிப்புகள் அனைத்தும் தவிடுபொடியாகி இமையம் தொடும் அளவிற்கு இதுவரை நாங்கள் வென்று வந்துள்ளோம்.அதனால் நாளை தமிழகம் நமதே என கூறியுள்ளார்.
இதற்கு மாற்றாக நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதாவது,நாம் வெற்றி கண்டவுடம் மகிழ்ச்சியை உள்ளங்களுக்குள் வைத்துக்கொண்டு வீட்டினுள்ளே கொண்டாட வேண்டும்.எனக்கு உடன்பிறப்புகளின் நலனே முதன்மையானது என கூறினார்.கொரோனா காலக்கட்டத்தில் வீதிகள் வெறிச்ஜோடட்டும் உள்ளங்களில் மகிழ்ச்சி பொங்கட்டும் என தெரிவித்தார்.இவர் கூறுவது பார்த்தால் நாளைய வெற்றி நமது என்பதை ஆணி தரமாக உரைப்பது போல இருந்தது.
இவர் கூறியது இன்று பழித்து விடும் போல,காலையில் 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.இதில் வேளச்சேரி முதலிய 13 தொகுதிகளில் திமுக வெற்றி இடங்களாக உள்ளது.அதனையடுத்து அதிமுக 3 தொகுதிகளில் வெற்றியை கண்டுள்ளது.அமமுக மற்றும் மநீம,நாதக ஆகியவை எந்த தொகுதிகளிலும் வெற்றியை காணவில்லை.பின்வரும் வாக்கு எண்ணிக்கைகளில் திமுக-வை விட அதிமுக அதிக வெற்றியை காண முடியுமா என்பதை காத்திருந்து பார்க்க வேண்டும்.