கமல் எடுத்த அதிரடி முடிவால்! அதிர்ந்து போன அதிமுக மற்றும் திமுக!

0
98

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன இந்த சூழலில் மக்கள் நீதி மையம் என்ற கட்சியை ஆரம்பித்து தீவிர அரசியல் இறங்கியிருக்கும் கமல்ஹாசன் மூன்றாவது அணி அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றார் இதன் காரணமாக கூட்டணிகளில் குழப்பங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது.

இது சம்பந்தமாக மக்கள் நீதி மையம் கட்சி நிர்வாகிகள் தெரிவித்ததாவது, பாராளுமன்றத் தேர்தலில் கட்சிக்கு வயது ஒன்று தவழும் குழந்தையாக இருந்த நேரத்திலேயே நாங்கள் தமிழ்நாட்டில் 4 சதவீத வாக்குகளைப் பெற்றோம்.

இப்போது கட்சியின் அடிப்படைக் கட்டமைப்பை வழிப்படுத்தி இருக்கின்றோம். இதன் காரணமாக தான் கமல் நாங்கள்தான் மூன்றாவது பெரிய கட்சி என்ற நம்பிக்கை தெரிவித்து இருக்கின்றார்.

கூட்டணி விஷயத்தில் எங்கள் கட்சி தலைவர் எடுக்கும் முடிவு எதுவாக இருந்தாலும் அது எங்களுக்கு சம்மதம்தான்.

முக்கிய திராவிட கட்சிகள் இரண்டையும் பலவீனப்படுத்தி விட்டாலே போதும் அதை தேர்தலுக்கு முன்பான வெற்றியாகவே நாங்கள் கருதுவோம்.

அதன்பிறகு பலவீனமான கூட்டணி அமைந்தால், எங்களுடைய வெற்றி இன்னும் ஈஸி ஆகிவிடும் அதற்கான பணிகளை தான் இப்போது முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றோம் என்று தெரிவித்தார்கள்.

தமிழ்நாட்டில் இரண்டு கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சியில் அமர்கிறார்கள், ஆகவே இந்த இரண்டு கட்சிகளும் மறைமுக கூட்டணி ஏற்பட்டுவிட்டது.

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஊழலும், லஞ்சமும், தான் இந்த நிலையில் இருக்கின்றது இதன் காரணமாக மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

கமல்ஹாசன் மக்கள் நீதி மையம் என்ற கட்சியை ஆரம்பித்து அரசியலுக்குள் நுழைய காரணமாக இருந்தது இந்த மக்கள் அதிருப்தி தான்.

மக்களின் தேவையை பூர்த்தி செய்து இருக்கின்றோம் இனி மக்கள் அவர்களுக்கு மாற்றம் வேண்டுமா, அல்லது வேண்டாமா, என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

இந்த தேர்தலிலே கமல்ஹாசன் என்ற நேர்மையான வலிமையான தலைமை வேண்டுமா அல்லது வேண்டாமா என்று அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

நேர்மையானவர்கள் எங்களுடன் இணைந்து கொள்வார்கள் என்ற அறிவிப்பு இரண்டு கூட்டணிகளிலும் அங்கீகாரத்திற்கு போராடும் கட்சிகளுக்கு நல்ல ஒரு வாய்ப்பாக அமைந்து இருக்கின்றது.

இந்த கூட்டணி விஷயத்தில் நாம் எங்கும் விருத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை அதற்கு பதிலாக நாம்தான் விருந்துக்கு எல்லோரையும் அழைக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றார்.

மக்கள் நீதி மையம் அதிமுக, திமுக, பாரதிய ஜனதா, ஆகிய கட்சிகளை தவிர்த்து மற்ற கட்சிகளுக்கு விடுத்த அழைப்பு தான் இது.

இதுவரை வேறுவழியில்லாமல் இரண்டு கூட்டணியில் ஏதேனும் ஒரு கூட்டணியில் சேர்ந்தவர்கள் மூன்றாவதாக ஒரு கூட்டணி அமையும் போது நிச்சயமாக வந்து இணைவார்கள். சின்னம் விஷயத்தில் இந்த கட்சிகளுக்கு போடப்படும் கட்டுப்பாடுகளாளும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

Previous articleசும்மா சொல்லக்கூடாது சூப்பரா வண்டி ஓட்டுற! குதுகலத்தில் பிக்பாஸ் போட்டியாளர்கள் ஏன் தெரியுமா!
Next articleகாவல் துறையினர் செய்த அந்த செயலால் கடுப்பான பொன்ராதாகிருஷ்ணன்! என்ன செய்தார் தெரியுமா!