காவல் துறையினர் செய்த அந்த செயலால் கடுப்பான பொன்ராதாகிருஷ்ணன்! என்ன செய்தார் தெரியுமா!

0
55

பாரதிய ஜனதா கட்சியின் வேல் யாத்திரை மதக்கலவரத்தை உண்டாக்கும் என்கின்ற பயம் இருப்பதன் காரணமாக, அந்த யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

இருந்தாலும் கூட ஒவ்வொருநாளும் தடையை பொருட்படுத்தாமல் யாத்திரையை நடத்துவதற்கான முயற்சிகளை அந்த கட்சியினர் எடுத்து வருவது பரபரப்பையும், பதற்றத்தையும், ஏற்படுத்தி இருக்கின்றது.

அரசு விதித்த தடையை மீறி ராணிப்பேட்டையில் வேல் யாத்திரை நடத்துவதற்காக அறிவிப்பை பாரதிய ஜனதா கட்சி அறிவித்திருக்கின்றது. இதனையடுத்து அந்தக் கட்சியை சார்ந்த ஏராளமானோர் நேற்றையதினம் ராணிப்பேட்டையில் முத்து கடையில் குவிந்திருந்தனர் .அதை தடுக்கும் விதமாக ஏகப்பட்ட காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர்.

இந்த யாத்திரையில் பங்கேற்க செல்லும் வழியிலேயே மாநில தலைவர் முருகன் கைது செய்யப்பட்டார். யாத்திரை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே நடந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பங்கேற்று உரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து வேல் யாத்திரை ஆரம்பிப்பதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்படுகின்றனர் என்று உணர்ந்துகொண்ட காவல்துறையினர், கூட்டம் முடியும் நேரத்தில் அங்கே திரண்டு இருந்த 300க்கும் மேற்பட்ட அந்த கட்சியை சார்ந்தவர்களை கைது செய்து கல்லூரி பேருந்தில் ஏற்றினார்கள்.

பொன் ராதாகிருஷ்ணன் பேசிக்கொண்டிருக்கும்போதே காவல்துறையினர் கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக பேசுவதற்கு கூட கூட அனுமதி மறுக்கப்பட்டது. இந்த யாத்திரைக்கு தடை விதித்திருக்கும் தமிழக அரசு பொதுக்கூட்டத்திற்கு கூட தடை விதித்திருக்கிறது, இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம் என்று மிகவும் ஆவேசமாக பேசி இருக்கின்றார் பொன்ராதாகிருஷ்ணன்.

அதன்பிறகு பொன்ராதாகிருஷ்ணன் அவர்களை கைது செய்து கல்லூரி பேருந்தில் ஏறினார்கள், அப்போது பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் ஆவேசமான குரலில், நான் கல்லூரி பேருந்தில் ஏற மாட்டேன் காவல்துறை வாகனத்தில் தான் ஏறுவேன் என்று தெரிவித்திருக்கின்றார்.

இதன் காரணமாக அங்கே சில நிமிடங்கள் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டு இருக்கின்றது.