ஆறாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு நாளை முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்.!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி பகுதியில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் உத்தரவிலும், கட்டுப்பாட்டிலும் இதுவரை 5 கட்டங்களாக அகழ்வாராய்ச்சிகள் முடிவடைந்துள்ளன. இதைத்தொடர்ந்து 6 ஆம் கட்ட அகழ்வாராய்ச்சிக்கான பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

 

இப்பணியின் போது முதுமக்கள் தாழி, பானைகள், ஓடுகள், நாணயம், மணிகள், செங்கல், எலும்புக் கூடுகள் மற்றும் சுவர் போன்றவை அடையாளம் காணப்பட்டு ஆராய்ச்சியிட் மூலம் கண்டெடுத்துள்ளனர். தமிழரின் தொன்மையை உலகறிய அங்கு அருங்காட்சியகம் அமைக்குமாறு தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.

 

இந்நிலையில் கீழடியில் அகழாய்வு பொருட்களை வைப்பதற்கான புதிய அகழ்வைப்பகத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டுவார் என்று சமூகவலைதளத்தில் தமிழக தொல்லியல் துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் பதிவு செய்துள்ளார்.

 

அப்பதிவில் தமிழக முதல்வர் பழனிசாமி அவர்கள் தொல்லியல் ஆய்வு வாயிலாக தமிழர் பெருமையினை பறைசாற்றிடும் வகையில், சிவகங்கை மாவட்டம் கீழடியில் ரூ.12.25 கோடியில் உருவாகும் உலகத்தரம் மிக்க அகழ்வைப்பகத்திற்கு நாளை காலை 10 மணிக்கு காணொளிகாட்சி வாயிலாக அடிக்கல் நாட்ட உள்ளார்’ இவ்வாறு அப்பதிவில் தெரிவித்தார்.

Leave a Comment