சாம்பியன் அணியை வீழ்த்திய தமிழ் தலைவாஸ்!!  புள்ளி பட்டியலில் முன்னேற்றம்!!

Photo of author

By Vijay

Pro kabaddi:  நடப்பு  சாம்பியனை வீழ்த்தி புள்ளி பட்டியலில் முன்னேறிய தமிழ் தலைவாஸ் அணி

ஹைதராபாத்தில் புரோ கபடி தொடரின் முதல் கட்ட லீக் சுற்றுகள் சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று அக்டோபர் 23 புனேரி பால்டன் மற்றும் தமிழ் தலைவாஸ் அணிக்கு இடையே நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தொடக்கம் முதலே தமிழ் தலைவாஸ் அணி முன்னிலை வகித்தது, போட்டி முழுவதும் தனது ஆதிக்கத்தை செலுத்தியது.

குறிப்பாக தமிழ் தலைவாஸ் அணியில் இடம்பெற்றுள்ள நரேந்தர் மற்றும் சச்சின் ஆகியோர் அபாரமாக விளையாடி புள்ளிகளை குவித்தனர். தலைவாஸ் அணியில் நரேந்தர் 9 புள்ளிகளை பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

Tamil Thalaivas defeated the champion team
Tamil Thalaivas defeated the champion team

சச்சின் அவருடன் இணைந்து 8 புள்ளிகளுடன் வெற்றிக்கு காரணமாக பங்காற்றியுள்ளார்.  ஒரு கட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 11 புள்ளிகளுடன் முன்னனியில் இருக்கும் போது புனேரி அணி கடுமையாக வெற்றிக்கு போராடியது.

இருப்பினும் புனேரி அணியால் தோல்வி வித்தியாசத்தை மாற்ற முடிந்ததே தவிர தொல்வியை மாற்ற முடியவில்லை.எனவே தமிழ் தலைவாஸ் அணி 35-30 என்ற கணக்கில் 5 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனால் தமிழ் தலைவாஸ் அணி ஐந்தாம் இடத்தில் இருந்து 10 புள்ளிகள் பெற்று நான்காம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.ஆனால் புனேரி பால்டன் அணி முதலிடத்தில் உள்ளது. இதனை தொடர்ந்து இன்று பெங்கால் வாரியர்ஸ் மற்றும் யு பி யோதாஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ் மற்றும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்  ஆகிய இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன.