இனி டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் தமிழ் அவசியம் இடம்பெறும்! புதிய அரசாணை வெளியிட்ட தமிழக அரசு!

0
130
Tamil will be required in DNPSC exams now! Government of Tamil Nadu has issued a new government!
Tamil will be required in DNPSC exams now! Government of Tamil Nadu has issued a new government!

இனி டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் தமிழ் அவசியம் இடம்பெறும்! புதிய அரசாணை வெளியிட்ட தமிழக அரசு!

தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி என்ற அரசு பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் நிரப்பப்படுகின்றன. அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களுக்கு ஏற்ப இந்த தேர்வுகளை இந்த ஆணையம் நடத்தி வருவது குறிப்பிடத் தக்கது. இந்த நிலையில் தமிழகத்தில் அரசு பணிகளில் சேர தாய் மொழி கட்டாயம் என தமிழக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

கடந்த ஆட்சி காலத்தில் வெளி மாவட்ட நபர்களுக்கு வேலை கொடுப்பதில் மும்முரம் காட்டியதாகவும் ஒரு சிலர் அரசின் மீது குற்றம் சாட்டுகின்றனர். சொந்த மாநில மொழியே தெரியாத சிலர் கூட இங்கு நடக்கும் இந்த தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெரும் நிகழ்வுகள் கூட பல நேரங்களில் நடைபெறும். தற்போது திமுக ஆட்சி அமைந்ததும் தமிழில் கட்டாயம் இடம் பெறும் என்று முதல்வர் சொல்லி இருந்தார்.

மேலும் தமிழக அரசு துறைகளில் உள்ள பணியிடங்கள் அனைத்திலுமே தமிழக இளைஞர்களை நூறு சதவிகிதம் நியமனம் செய்யப்படும் என்றும் இந்த தேர்வுகள் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் கட்டாயமாக தமிழில் புதிதாக அறிமுகம் செய்யப்படும் என்றும் இன்று அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது இதுதான்.

தமிழ்மொழி தகுதி தாள் தேர்வுகள் அனைவருக்கும் கட்டாயம் ஆக்கப்படுகிறது.

தமிழ் மொழித் தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு தரத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது.

கட்டாய தமிழ்மொழித் தாளில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் தேர்ச்சி கட்டாயமாக்கப்படுகிறது. தேர்ச்சி பெறாதவர்களின் இதர தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படமாட்டாது.
தொகுதி-I. II மற்றும் IIA ஆகிய இரண்டு நிலைகளைக் கொண்ட தேர்வுகளின் நடைமுறைகள் விவரம்:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்ற முதனிலை மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வு என இரண்டு நிலைகளைக் கொண்டதாக உள்ள தொகுதி 1, 11 மற்றும் IIA ஆகிய அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி தகுதித் தேர்வானது. முதன்மைத் தேர்வுடன் விரிந்துரைக்கும் வகையிலான தேர்வாக அமைக்கப்படும்.
மேற்படி முதன்மை எழுத்துத் தேர்வானது, மொழிபெயர்த்தல், சுருக்கி வரைதல், பொருள் உணர்திறன், சுருக்கக் குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல், கடிதம் வரைதல் (அலுவல் சார்ந்தது) மற்றும் கட்டுரை வரைதல் உள்ளிட்ட தலைப்புகள் கொண்டதாக நடத்தப்படும். இத்தேர்வு 100 மதிப்பெண் கொண்டதாக இருக்கும். இதில் குறைந்தபட்சம் 40 மதிப்பெண்கள் பெற வேண்டும்.
ஒரே நிலை கொண்ட தேர்வுகளின் (தொகுதிIII  மற்றும் IV) நடைமுறைகள் விவரம்.
தற்போது நடைமுறையிலுள்ள பொதுத்தமிழ் பொது ஆங்கிலம் உள்ள  தேர்வுகளில், பொது ஆங்கிலத்தாள் நீக்கப்பட்டு, பொது தமிழ்மொழித்தாள் மட்டுமே மதிப்பீட்டு தேர்வாக அமைக்கப்படும்.  தமிழ் மொழித்தாளானது தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வாக நடத்தப்படும். இத்தமிழ்மொழித்தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வானது 150 மதிப்பெண்களுக்கு பகுதி- அ எனக் கொள்குறி வகையில் அமைக்கப்படும்.
பகுதி- அ , அளவில் குறைந்தபட்சம் 40 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே, பகுதி ஆ வில் எழுதியதேர்வுத்தாளும் இதர தாளும் மதிப்பீடு செய்யப்படும்.
ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவ பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு வனத்துறை சீருடைப் பணியாளர் தேர்வுக்கு குழுமம் உள்ளிட்ட மாநிலத்தின் இதர தெரிவு முகமைகளை பொருத்தவரையில்  கட்டாய தமிழ் மொழித்த தகுதி தேர்வினை நடத்துவது தொடர்பாக மேற்படி வழிகாட்டு நெறிமுறிகளை  சம்பந்தப்பட்ட நிர்வாகத்துறைகளால் வெளியிடப்படும்.
தமிழ்நாடு பொதுத்துறை நிறுவனங்களை பொருத்தவரையில் தேவையான மேற்படி வழிகாட்டு நெறிமுறைகளை நிதித்துறையால் வெளியிடப்படும் என்றும் சொல்லப்பட்டு உள்ளது.
Previous articleஅலுவலகத்திற்குள் சென்ற ஆடு! இலை தழை போல் முக்கிய ஆதாரங்களை எடுத்து சென்று அதிர்ச்சி!
Next articleஇயக்குனரிடம் ஹீரோயின்கள் வேணும் என டிமாண்ட்! பிரபுவின் ஆதாரப்பூர்வ வீடியோ வைரல்!