மீண்டும் வருகிறது  தமிழா தமிழா நிகழ்ச்சி!! புதிய தொகுப்பாளர் இணையத்தில் வைராலகும் தகவல்!!

Photo of author

By Jeevitha

மீண்டும் வருகிறது  தமிழா தமிழா நிகழ்ச்சி!! புதிய தொகுப்பாளர் இணையத்தில் வைராலகும் தகவல்!!

கரு பழனியப்பன் தமிழ் திரைப்பட இயக்குனர். அவர் முதலில் பார்த்திபன் கனவு படத்தில் அறிமுகமானார். இவர் சிறந்த கதாசிரியர் விருது பெற்றவர். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு  வரை ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒரு நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்துள்ளார். இவர் தமிழா தமிழா என்ற விவாத நிகழ்ச்சி தொகுத்து வழங்கி வருகிறார்.

அந்த நிகழ்ச்சி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த நிகழ்ச்சி மூலம் அதிகம் இவர் பிரபலமானார். இந்த நிகழ்ச்சி பட்டிமன்றம் மற்றும் நீயா நானா நிகழ்ச்சிக்கு போட்டியாக அமைந்தது. மேலும் இவர் இயக்குனர் பார்த்திபன் மற்றும் எழில் ஆகியோருக்கு உதவி இயக்குனராகவும் பணிபுரிந்து வந்தார்.

மேலும் இவர் தொகுத்து வழங்கும் அந்த நிகழ்ச்சி மிகவும் வித்தியாசமாக இருந்தது. அதனை தொடர்ந்து இவர் ஒருமையில் பேசியதாகவும் , ஒருவரை சார்ந்து பேசி மற்றவர்களை காயப்படுத்தினர் என்று விமர்சனங்கள் எழுந்தது. இவர் அதன் பின் தமிழா தமிழா என்ற நிகழ்ச்சியில் இருந்து முழுவதும் விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதன் காரணமாக இந்த நிகழ்ச்சி இரண்டு மாதம் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.

அதனையடுத்து தற்போது ஜீ தமிழ் தொலைகாட்சி மீண்டும் தமிழா தமிழா நிகழ்ச்சியை தொடங்குவதாக அறிவித்துள்ளது. இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி ஒளிபரப்ப உள்ளதாகவும் ஆவுடையப்பன் என்பவர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.