நிறைவேறிய நீண்ட நாள் ஆசை! மகிழ்ச்சியில் தமிழிசை சௌந்தரராஜன்!

0
129

புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்று இருக்கின்ற தமிழிசை சவுந்தரராஜன் அவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பேனர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

புதுவையில் முதல் அமைச்சர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வரும் சூழ்நிலையில் ஆளுநராக பதவி வகித்த கிரண்பேடி அவர்களுக்கும் நாராயணசாமிக்கும் இடையே மிகப் பெரிய மோதல் போக்கு நிலவி வந்தது. ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராகவும் அவரை புதுச்சேரியில் இருந்து வாபஸ் பெற வேண்டும் என்றும் முதலமைச்சர் தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் , கிரண்பேடியை வாபஸ் பெறுவதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

தெலுங்கானா மாநில ஆளுநராக இருந்து வரும் தமிழிசை சவுந்தரராஜன் அவர்களுக்கு கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் ஆக பொருப்பு கொடுத்திருக்கின்றார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். இந்த நிலையில் இன்று காலை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஆக தமிழிசை சௌந்தரராஜன் பதவியேற்றுக்கொண்டார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார். அந்த பதவி ஏற்பு விழாவில் புதுவை முதல் அமைச்சர் நாராயணசாமி எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்த தமிழிசை பதவிப் பிரமாணத்தின் போது தமிழில் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நீண்டநாள் ஆசை என்று தெரிவித்தார். தமிழ் புறக்கணிக்கப்படுவதில்லை தமிழுக்கான அதிகாரம் எப்போதும் இருக்கும் ஆளுநராக இல்லாமல் மக்களுக்கு துணை புரியும் ஒரு சகோதரியாக நான் இருப்பேன் என்று தெரிவித்திருக்கிறார்

Previous articleமனைவி மீது சந்தேகப்பட்டு கணவன் செய்த கொடூர செயல்!
Next articleஇபிஎஸ் ஓபிஎஸை டென்ஷன் ஆக்கிய சசிகலா!