அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவர் நியமனம்! கட்சித் தலைமை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Photo of author

By Sakthi

அதிமுகவின் செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணி அளவில் தொடங்கும் என்று நேற்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி இன்று காலை 10 மணி அளவில் அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் ஆரம்பமானது. இதில் மாவட்ட செயலாளர்கள் சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் என்று ஒட்டுமொத்தமாக 270 பேர் பங்கேற்று கொண்டதாகத் தெரிகிறது.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் உள்ளிட்டோரின் தலைமையில் நடைபெற்ற இந்த செயற்குழு கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்றவாரம் அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது அந்த கூட்டத்தில் உட்கட்சி விவகாரம் தொடர்பாக காரசாரமாக விவாதம் நடந்தது. இதற்கு நடுவில் அதிமுகவின் செயற்குழு கூட்டம் டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி இன்றைய தினம் நடைபெறும் என்று அதிமுக தலைமை அறிவித்து இருந்தது. அதன்படி இன்று தொடங்கிய செயற்குழு கூட்டத்தில் அதிமுகவின் தற்காலிக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக கட்சியின் தலைமை தெரிவித்து இருக்கிறது.