தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 13ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆரம்பமானது 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் முதல்முறையாக வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி வரையில் நடைபெறும் என்று சபாநாயகர் தெரிவித்து இருந்தார். சென்ற 23ஆம் தேதி முதல் பல துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடந்து வருகின்றது. இந்த சட்டசபை கூட்டத்தொடரில் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கான வாதங்கள் முன்வைக்கப் பட்டது..
இந்த சூழ்நிலையில், தமிழக பாஜகவின் சட்டசபை உறுப்பினர்கள் தமிழக அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை எதிர்த்து சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்து இருக்கிறார்கள். இதனையடுத்து பத்திரிகையாளர்களை சந்தித்த பாஜகவின் சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் மத்திய அரசு விவசாயிகளின் வாழ்க்கையை முன்னேற்றுவதற்காக வேளாண் சட்டத்தைக் கொண்டு வந்தது.
ஆனால் இன்று திமுக தலைமையிலான தமிழக அரசு வேளாண் சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறது. இதுதான் விவசாயிகளுக்கு எதிரான செயல் ஆகவே நாங்கள் அனைவரும் வெளிநடப்பு செய்து இருக்கிறோம் என அவர் கூறியிருக்கின்றார்.