தமிழக பாஜகவை வலுப்படுத்த நடிகை நமீதாவுக்கு பொறுப்பு! நிர்வாகிகள் அதிரடியாக மாற்றம்

Photo of author

By Jayachandiran

தமிழக பாஜகவை வலுப்படுத்த நடிகை நமீதாவுக்கு பொறுப்பு! நிர்வாகிகள் அதிரடியாக மாற்றம்

Jayachandiran

Updated on:

தமிழக பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினராக நடிகை நமீதாவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு சென்னை பகுதியின் செயற்குழு உறுப்பினராக நமீதாவை கட்சித்தலைவர் எல்.முருகன் நியமனம் செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் பாஜக கட்சியின் மாநில தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து நீண்டநாட்களாக நிரப்பாமல் இருந்த தமிழக பாஜக மாநில தலைவர் பதவி எல்.முருகனுக்கு வழங்கப்பட்டது.பாஜக கட்சியில் மேலும் பல முக்கிய புள்ளிகள் துணைத்தலைவராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது மூன்று மாதங்களாக கட்சி பொறுப்பில் நீடித்த நிலையில் கட்சியின் பதவிகளில் அதிரடி மாற்றங்கள் செய்துள்ளார். திமுகவில் இருந்து விலகிய விலகி பாஜகவில் இணைந்த வி.பி.துரைசாமி மாநில துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார். மேலும் வானதி சீனிவாசன், நைனார் நாகேந்திரன், முருகானந்தம், சக்கரவர்த்தி, எம்.என்.ராஜா, கனக சபாபதி, மகாலஷ்மி மற்றும் புரட்சிக் கவிதாசன் ஆகியோரும் துடைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கட்சியின் பொதுச்செயலாளராக கே.டி.ராகவன், சீனிவாசன், செல்வகுமார், கரு.நாகராஜன் போன்றோர் மாற்றியுள்ளனர். மாநில பொருளாளராக எஸ்.ஆர்.சேகர் செயல்படுகிறார். கட்சியின் பொருளாளராக சண்முக ராஜ், டால்பின் ஸ்ரீதர், பாஸ்கர், வரதராஜன், மலர்கொடு, உமாரதி, பார்வதி நடராஜன், கார்த்தியாயினி, சுமதி வெங்கடேஷ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இணைப் பொருளாளராக சிவசுப்ரமணியன் மற்றும் மாநில அலுவலக செயலாளராக சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.