ஸ்டாலினின் பேச்சில் திராணியில்லை! சிங்கமாய் சீறிய அண்ணாமலை!

Photo of author

By Sakthi

வேளாண் சட்டத்திற்கு எதிரான தீர்மானம் கொண்டு வந்த முதலமைச்சர் ஸ்டாலினின் பேச்சில் உறுதி இல்லை எனவும், 3 வேளாண் சட்டத் திருத்தங்களை எதிர்த்து மாவட்டம்தோறும் போராட்டம் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும், தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை மிகவும் அதிரடியாக கூறியிருக்கிறார். மறைந்த முன்னாள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி கே மூப்பனார் அவர்களின் 20 வருட நினைவு நாளை முன்னிட்டு சென்னை தேனாம்பேட்டையில் இருக்கின்ற அவருடைய நினைவிடத்தில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை அஞ்சலி செலுத்தியிருக்கிறார். அதனைத்தொடர்ந்து பத்திரிக்கையாளர்களிடம் உரையாற்றிய அண்ணாமலை சில விஷயத்தை தெரிவித்து இருக்கிறார்.

அதாவது நோய்தொற்றுக்கு இடையே பள்ளிகள் திறப்பதில் கூடுதல் கவனத்துடன் அரசு செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை வைத்திருக்கிறார். 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இதுவரையில் தடுப்பூசி செலுத்தப்படவில்லை என்ற அண்ணாமலை, அரசு பள்ளியை பொருத்தவரையில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்தும் என்று நம்பி இருப்பதாக கூறியிருக்கின்றார். அரசியலில் நேர்மை என்பதே இல்லை என தெரிவித்த அண்ணாமலை இருந்தாலும் நேர்மையான அரசியலை முன்னெடுக்க ஜி கே மூப்பனார் நினைவிடத்தில் நாம் ஊரில் ஏற்றுக் கொள்வோம் என தெரிவித்தார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கின்ற 3 வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் பாஜகவின் விவசாய பிரிவு உடனடியாக இறங்கும் என கூறினார்.

தேர்தல் சமயத்தில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என கேட்ட காரணத்திற்காகவே தற்சமயம் வேளாண் சட்டத்தை எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருப்பதாக தெரிவித்த அவர், இது வெறும் கண்துடைப்பு நாடகம் என கூறினார். வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சில் திராணி கிடையாது எனவும் அவர் கூறியிருக்கிறார். 3 வேளாண் சட்ட திருத்தங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருப்பதை எதிர்த்து தமிழகம் முழுவதும் மாவட்ட அளவில் போராட்டம் நடத்துவதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்