சர்க்கரை ஆலைத் தொழிலாளர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு இனிப்பான செய்தி வழங்கிய தமிழ்நாடு அரசு!!

Photo of author

By Gayathri

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலை பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு போனஸ் வழங்கிட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

2 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் ஊழியர்களுக்கு 20% போனஸ், மற்ற ஆலைகளின் ஊழியர்களுக்கு 10% போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 16 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் உள்ளன. இதில் பணி புரியும் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு வரும் தீபாவளியை முன்னிட்டு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் 2023 – 2024 ஆம் ஆண்டிற்கான மிக ஊதியம் மற்றும் கருணைத்தொகை வழங்க அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இச்செய்தி சக்கரை ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 16 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் சுமார் 5775 தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் பயன்பெறுவர். மேலும், மிகை ஊதியம் மற்றும் கருணை தொகை வழங்க ரூ.411.90 இலட்சங்கள் செலவினம் ஏற்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் ஒதுக்கீட்டு உபரி உள்ள சுப்ரமணிய சிவா மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய இரு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கும் மிகை ஊதியமாக 8.33% மற்றும் கருணை தொகையாக 11.67% என மொத்தம் 20% போனஸ் வழங்கவும், மீதமுள்ள 14 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு மிகை ஊதியமாக 8.33% மற்றும் கருணை தொகையாக 1.67% என மொத்தம் 10% போனஸ் வழங்கவும் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.